கடலூர் : 
              தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று 19ம் தேதி  துவங்குகிறது.தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது.   அதையொட்டி இன்று முதல் (19ம் தேதி) வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.  வரும் 26ம் தேதிவரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) அனைத்து நாட்களிலும் காலை 11  மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.
             இதற்காக ஒவ்வொரு  தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம்  மனுத்தாக்கல் செய்யலாம். அதன்படி கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம்  தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ.,  அலுவலகங்களிலும், நெய்வேலி தொகுதிக்கு நெய்வேலியில் உள்ள நில எடுப்பு துணை  கலெக்டர் அலுவலகத்திலும், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி (தனி),  காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கு கடலூரில் கலெக்டர்  அலுவலக வளாகத்தில் அந்தந்த தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல்  அலுவலர்களிடம் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு

0 கருத்துகள்:
கருத்துரையிடுக