கடலூர்:
              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத்  தொகுதிகளுக்கும், தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர்  பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
                 கடலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை கண்காணிக்க தேர்தல் ஆணையம்  பார்வையாளர்களை நியமித்துள்ளது.  
 விபரம் :
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பால் சிங் திட்டக்குடி (தனி), 
விருத்தாசலம்  தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டி.டி. அந்தோனி நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கும், 
டி.எஸ். தோக் ரஜூர்கர் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கும், 
ஷாலினி மிஷ்ரா  புவனகிரி, சிதம்பரம் தொகுதிகளுக்கும், 
ரமேஷ் கிருஷ்ணன், காட்டுமன்னார்கோயில் (தனி)  தொகுதிக்கும் பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
மத்திய சுங்க வரித்துறை  அதிகாரி தினேஷ் சிங் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி  தொகுதிகளுக்கும்,
 மத்திய சுங்க வரித்துறை அதிகாரி ஜி.எம்.காமே கடலூர்,  குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கும் 
தேர்தல்  செலவு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக