உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 19, 2011

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் தொழிலதிபர்


சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் தனியார் பில்டர்ஸ் நிறுவனத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம் (54) சுயேச்சையாக போட்டியிடுகிறார்.  
 
            காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 633 வாக்காளர்கள் உள்ளனர். ஆதிதிராவிட சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். இத்தொகுதியில் விவசாயம்தான் பிரதான தொழிலாகும்.  கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாகானாம்பட்டு பகுதியைச் சேர்ந்த துரை.ரவிக்குமார் போட்டியிட்டு 57,244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் 43,830 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.  
 
                 இந்நிலையில் வெள்ளம், பல்வேறு பிரசனைகளின்போது தொகுதி பக்கமே வரவில்லை என்றும், அப்பகுதி மக்களிடம் எந்தவித குறைகளும் கேட்கவில்லை என துரை.ரவிக்குமார் எம்.எல்.ஏ. மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தம் உள்ளது. தற்போது ரவிக்குமார் திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிடுவார் எனக் கூறப்  படுகிறது.  இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இதே தொகுதியைச் சேர்ந்த பொறியியல் துறையில் உயர்கல்வி படித்த கே.ஐ.மணிரத்தினத்தை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனைக்கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.  
 
             தொழிலதிபர் மணிரத்தினம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், போட்டியிடுவதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior