உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி துணை ராணுவம்: டி.ஜி.பி.லத்திகாசரண்







கடலூர்: 

         ""தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 200 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்'' என தமிழக டி.ஜி.பி., லத்திகாசரண் கூறினார்.

              கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் 4.38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எஸ்.பி., அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. டி.ஜி.பி., லத்திகாசரண் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., குடாவ்லா முன்னிலை வகித்தனர்.

பின்னர் டி.ஜி.பி., லத்திகாசரண்  கூறியது: 

            கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போதிய இட வசதியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். அதனால் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 3,300 சதுர அடியில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் எங்கெங்கு போலீஸ் அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதோ அங்கெல்லாம் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

              அதன்படி திருவாரூரில் மாவட்ட போலீஸ் அலுவலகம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. அதேப்போன்று தேவைப் படும் இடங்களில் கமிஷனர் அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது. இதற்காக 200 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளனர். தமிழகத்தில் உள்ள பதட்டமான, மிக பதட்டமான தொகுதிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

               அவை முடிந்தவுடன் கலெக்டருடன் பேசி இறுதி செய்யப்படும். இவ்வாறு டி.ஜி.பி., லத்திகாசரண் கூறினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாவட்ட நீதிபதி ராமபத்ரன், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் உடனிருந்தனர்.

1 கருத்துகள்:

  • kurinchi selvan says:
    15 மார்ச், 2011 அன்று 4:03 PM

    த்த்ரோகம் முக்கிய அறிவிப்பு
    வணக்கம் நான் கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்தவன் எங்கள் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள் வேட்பாளராக அரியலூர் மாவட்டம் திரு.அறிவுசெல்வன் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் இதனால் கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பெரும் அத்ரிப்தி அடைந்து உள்ளார்கள் மேலும் இந்த முறை யாரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அறிவுசெல்வன் அவர்களுக்கு கட்சி பணியாற்ற யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறபடுகிறது இதனால் நாம் புவனகிரி தொகுதி தோல்வி அடைவோம் எனெவே இதை தடுக்க எங்கள் மாவட்ட சேர்ந்த திரு பேரசசரியர் திருநாவுகரசு அல்லது திரு தேவதாஸ் படையாச்சி அவர்களுக்கு தேர்வு செய்தல் நிச்சியம் வெற்றி கிடைக்கும் .9944348353

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior