உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மார்ச் 31, 2011

2011 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி ஆட்டத்தில் நுழைந்ததுமொஹாலி:

           மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

              முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பையில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது.இந்தியா வெற்றி பெற்றதும், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் உற்சாகக் கோஷம் விண்ணை முட்டியது. போட்டியை நேரில் கண்டு ரசித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பரபரப்பான இறுதி கட்டத்தில் எழுந்து நின்றபடி ஆட்டத்தை ரசித்தனர். வெற்றி பெற்றதும் ரசிகர்களின் உற்சாகத்தில் அவர்களும் பங்கேற்று கைதட்டி இந்திய அணிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

              பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் ஆட்டத்தை இறுதி வரை கண்டுகளித்தனர். வெற்றிக்குப் பின் இருவருமே இந்திய அணியைப் பாராட்டும் வகையில் கைதட்டினர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தபோதிலும், வீரர்கள் மிகுந்த நட்புறவுடனேயே ஆடினார்கள். இரு அணி வீரர்களும் ஒருபோதும் மோதல் போக்கில் ஈடுபடவில்லை.நாடு முழுவதும் கொண்டாட்டம்:

            இந்தியாவின் வெற்றி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். இந்தியா வெற்றி பெற்றதும் நாடு முழுவதுமே பட்டாசுகளை வெடிக்கும் சப்தம் எதிரொலித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய திரைகளில் இந்தியாவின் வெற்றியைக் கண்டுகளித்த ரசிகர்கள் ஆடல், பாடலுடன் வெற்றியைக் கொண்டாடிவிட்டே வீடு திரும்பினர்.

வரலாறு தொடர்கிறது: 

               உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ந்து வென்று வருகிறது. இதற்கு முன் 4 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் 5-வது முறையாக இந்தியாவின் வெற்றி வரலாறு தொடர்கிறது.

3-வது முறையாக இறுதி ஆட்டத்தில் இந்தியா

            உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. அப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

             அதன் பின்னர் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் இந்திய அணியால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடிந்தது. ஆனால் அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது.அதன் பின்னர் இப்போதுதான் இந்திய உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி இப்போது நல்ல பலத்துடன் உள்ளது. தவிர இந்திய அணியின் மற்ற கேப்டன்களைவிட தோனிக்கு அதிர்ஷ்டம் அதிகம். 

               எனவே இந்த முறை இந்தியா எப்படியும் உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆசிய அணிகள் : இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக இரு ஆசிய அணிகள், இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன. தவிர இரு நாடுகளும் போட்டியை நடத்தும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.2007 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதற்கு முந்தைய (2003) உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior