நெய்வேலி:
நெய்வேலி தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த பாண்டியன் என்பவரது வேட்புமனுவை நெய்வேலித் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.
நெய்வேலி தொகுதியில் வேட்புமனு செய்திருந்த 9 வேட்பாளர்களில், 8 பேரின் வேட்புமனு திங்கள்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. என்எல்சி ஊழியர் பாண்டியன் சுயேச்சையாக தாக்கல் செய்த வேட்புமனுவை முதலில் நிராகரித்த தேர்தல் அதிகாரி, அவரது வேட்புமனுவை ஏற்பது குறித்து செவ்வாய்க்கிழமை தீர்வு காணப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் பாண்டியன் நேரடி அரசு ஊழியர் கிடையாது. மேலும் இவருக்கு மத்திய அரசோ, மாநில அரசோ ஊதியம் வழங்கவில்லை. லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1911ஏ-ன் படி இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதால், பாண்டியனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக கந்தசாமி தெரிவித்தார்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:
தி.வேல்முருகன் (பாமக),
எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் (அதிமுக) ,
எம்.கற்பகம் (பாஜக),
பி.சந்திரா (எஸ்யுசிஐ),
பி.குமார் (ஐஜேகே),
எஸ்.இளங்கோவன் (லோக்ஜனசக்தி)
உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுடன்,
சுயேச்சை
சுயேச்சை வேட்பாளர்களான
எஸ்.பாண்டியன்,
வி.கே.குமரகுரு,
பி.லில்லி ஆகியோரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக