உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

மாணவர்கள் சமுதாயத்திற்கு உழைக்க முன்வர வேண்டும் : அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

பண்ருட்டி : 

             ""கல்லூரி மாணவர்கள் சமுதாய பங்களிப்புடன் செயல்பட வேண்டும்'' என திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசினார். 

             பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கட்டடத்துறை உதவி பேராசிரியர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அண்ணா பொறியியல் கல்லூரி பதிவாளர் ராஜா முன்னிலை வகித்தார். புலமுதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சென்னை கிண்டி பொறியியல் ஆய்வுத்துறை விஞ்ஞானி நீலமேகம், அண்ணா பொறியியல் கல்லூரி தனி அலுவலர் வெங்கடேசன், ஜேக் அசோசியேஷன் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவில் திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் தொழில் நுட்ப படைப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது :

             மாணவர்கள் கடமைக்காக படிக்க வேண்டும் என்பது போல் இல்லாமல் சமுதாயத்திற்காக உழைக்க முன்வர வேண்டும். எல்லா மனிதர்களும் உழைக்கின்றனர். ஆனால் சில மனிதர்கள் மட்டும் பயன் பெறுகின்றனர் என கூறுவதுண்டு. யார் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்களோ அவர்கள் முழு பயன்பெறுவர். கட்டுமானத் துறை, பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை வளர்ந்துள்ளது.
             உலகத்தில் பூமி வெப்பமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், கனிம வளங்கள் குறைந்து வருவது ஆகியவைற்றை தடுக்கா விடில் நோய் வருவதை தடுக்கவே முடியாது. அதற்கு மாற்றுத் திட்டம், ஆய்வுகள் செய்ய வேண்டியது அவசியம். சமுதாயத்தின் விளை பொருளாக இருந்த கல்வி அறிவு தற்போது பொருளாதாரம் ஈட்டுவதாக உள்ளது. இங்கு தேசிய அளவிலான முதலாவது கருத்தரங்கில் 400 ஆய்வு கட்டுரையில் 120 தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

              மாணவர்கள் பொறியியல் பிரிவில் மட்டும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. சமுதாய தலைவர்களாகவும், தொழில் முனைவர்களாகவும் சமுதாய பங்களிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior