உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், ஏப்ரல் 04, 2011

கடலூரில் முதல்வர் கருணாநிதி 9-ம் தேதி பிரச்சாரம்

கடலூர்:
           
              தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9-ம் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுகிறார்.குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி உள்ளிட்ட கடலூர் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மஞ்சக்குப்பம் மைதானம், மேடை உள்ளிட்டவற்றை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை இரவு பார்வையிட்டார். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், 
                 முதல்வர் கருணாநிதி 9-ம் தேதி கடலூர் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான நல திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பார்க்கிறேன்.தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ள திட்டங்களையும் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக வந்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் கொடிகள் மட்டும்தான் உள்ளன. தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior