உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், ஏப்ரல் 04, 2011

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பங்கேற்ப்பு


விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
 
விருத்தாசலம்:
 
              மின்சாரமே பற்றாக்குறையாகவும், தேவையான போது கிடைக்காமலும் உள்ள நிலையில் இலவசமாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ள மிக்சியை எங்கே வைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.
 
விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியது:
 
                 எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. ஆனால் நாங்கள் யுத்த களத்தில் உள்ளோம். இது காங்கிரஸýக்கும் மானமுள்ள பிள்ளைகளுக்கும் நடக்கும் யுத்தம்.காங்கிரûஸ தோற்கடிப்பது மட்டும் நமது நோக்கமல்ல. காங்கிரஸ் தாய் தமிழ் நிலத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கருணாநிதிக்கு மட்டும்தான் தேவை.
 
               சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்தும், நடந்து செல்ல சாலை இல்லை. பாதையை சரிசெய்யாத அரசு, எப்படி மக்களை நல்ல பாதையில் வழிநடத்திச் செல்லும்?.மனித வாழ்க்கைக்கு மின்சாரம் முக்கியமாகும். சின்னஞ்சிறு நாடுகள் கூட தடையில்லா மின்சாரத்தை வழங்குகிறது.ஆனால் இங்கு மின் உற்பத்திக்கு வழியில்லை. இந்த நிலையில் கிரைண்டர், மிக்ஸியை வாங்கி எங்கே வைப்பது?. 
 
             அனைவருக்கு ஒரே கல்வி நிலை உருவாக்கப்பட்டிருக்கிறதா?, ஏழைக்கு ஒரு நிலை, பணக்காரருக்கு ஒரு நிலை. எதற்கெடுத்தாலும் இலவசம்.வளர்ச்சி திட்டம் ஏதேனும் உண்டா?, நான்கு திட்டங்கள்தான் செயல்படுத்தப்படுகின்றன. இலவசம், மானியம், போனஸ், சலுகை இவை மட்டும் தான் செயல்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் தேர்தலை பற்றி சிந்திப்பவர்கள். தலைவர் அப்படியல்ல. எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அப்படி ஒரு தலைவரும் இங்கு இல்லை.
 
            காங்கிரஸ் தமிழ் உணர்வுக்கு எதிரான கட்சி. காவிரி நீர்ப் பிரச்சனையில் காங்கிரஸின் நிலை என்ன?. முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸின் நிலை பற்றி இந்த தொகுதி வேட்பாளரிடம் கேளுங்கள்.ஊழலில் தலைசிறந்த நாடாக இந்தியா இருக்கிறது. 2-ஜி அலைக்கற்றை ஊழல். போபர்ஸ் பீரங்கி ஊழல். ஆதர்ஸ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் ஊழல் என இருக்கிறது.கருணாநிதி ஊழலுக்கு நெருப்பு என்கிறார். ஆனால் அவர்தான் ஊழலுக்கு பொறுப்பு என்றார் சீமான்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior