உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் : மருத்துவ சங்கத் தலைவர் சடகோபன்

கடலூர் : 

            ""உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்'' என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சடகோபன் கூறினார். 

கடலூரில் இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சடகோபன் கூறியது: 

               இந்திய மருத்துவ சங்கம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 200 கிளைகள் உள்ளது. இதில் 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 23 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் இறக்கும் போது மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். நான் பதவியேற்ற மூன்று மாதத்தில் 16 இடங்களில் தனியார் மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. தாக்குபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. 

              இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. ஐந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று பணிபுரியாத நிலையில், மூன்றரை ஆண்டுகளில் பேச்லர் ரூரல் ஹெல்த் சர்வீஸ் (பீ.பி.எச்.எஸ்) முடித்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று எப்படி பணிபுரிய முடியும். மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆங்காங்கே மரங்கள் வெட்டப்படுகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. 

              இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூன்று மாதத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது, சிகரெட், பாஸ்ட் புட் ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. சரியான உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தலைவர் சடகோபன் கூறினார். டாக்டர்கள் ராஜேந்திரன், சந்திரன், சந்திரலாதன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior