உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து பிருந்தா காரத் பிரச்சாரம்


சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் (இடதுகோடி).
 
சிதம்பரம்:
 பிரச்சாரம் 
             திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.
 
சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
 
              அதிமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக கருணாநிதி தலைமையிலான திமுக செய்து வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜெயலலிதா தலைமையில் 9 அரசியல் கட்சியினர் இணைந்து உருவாக்கியது இக் கூட்டணி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியில் பல்வேறு விதமான சமூக நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை பாரம்பரியமாக நான் மதித்ததுண்டு. ஆனால் இப்போது அவையெல்லாம் எங்கே போனது. தமிழகம் ரொம்ப வித்தியாசமாக மாறிவிட்டது.
 
                 திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதிக்கு பிறகு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் உள்ளது. அது நடக்கும். மக்கள் மீது காங்கிரஸ், திமுக கட்சிகள் இரட்டைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சட்டப் பேரவைத் தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது. இதில் திமுக அரசை அகற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே, ஏன்? உலகுக்கே நல்ல பாடத்தை தமிழகம் கற்பிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் குரல் எழுப்பினார்களா? விலைவாசி உயர்வு பற்றியும், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை பற்றியும் குரல் எழுப்பினார்களா? இல்லை. 
 
              அப்போது இடதுசாரிகளும், அதிமுகவும் தான் குரல் கொடுத்தது.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பணக்காரர்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வரிச் சலுகையை விட்டு கொடுத்துவிட்டு விவசாயிகள் மீதான வரிச் சுமையை அதிகரித்துள்ளது. இதற்காக நாங்களும், அதிமுகவும்தான் குரல் கொடுத்தோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆயிரம் கோடியை கடலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் வெள்ளத்தால் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணலாம். விவசாயிகள் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யலாம்.
 
 
              இதனால், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மலர அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் பிருந்தா காரத்.கூட்டத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். தேமுதிக நகரச் செயலாளர் கே.விஜயகுமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior