உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 25, 2011

திட்டக்குடி பகுதியில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி பகுதியில் இயங்கும் தனியார் மற்றும் மினி பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.
            இதையொட்டி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த புகார்களின் பேரில் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டனர் அதன் பேரில் விருத்தாசலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும போலீசார் திட்டக்குடி பகுதியில் தனியார் பஸ்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

                 வேப்பூரில் இருந்து ராமநத்தத்திற்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் ரூ 5.50 கட்டணம் வசூல் செய்வதற்கு பதில் ரூ 6 வாங்கியதை கண்டுபிடித்தனர். இதையொட்டி போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் சம்மந்தப்பட்ட கண்டக்டரை எச்சரித்ததுடன் கூடுதல் கட்டணம் எழுதப்பட்டிருந்த டிக்கெட்டுகளை சேகரித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

                 மேலும் தொடந்து நடத்தப்பட்ட சோதனையில் வேப்பூரில் பர்மிட் இன்றி இயங்கிய ஒரு ஆட்டோ, ராமநத்தம் பகுதியில் பர்மிட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. 
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் கூறியது.

                தனியார் பஸ்களில் இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பஸ்களின் பர்மிட்டுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும், கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கண்டக்டர் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். இவைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்படடுள்ளது.

              பேருந்து, டாக்சி, ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் ஓட்டுநர் லைசன்ஸ் கைவசம் வைத்திருக்க வேண்டும் பணியின் போது பெயருடன் கூடிய பேட்ஜ்உடன் யூனிபார்ம் அணிந்துஇருக்க வேண்டும் பர்மிட், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் லைசன்ஸ் இல்லாத நபர்களிடம் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior