உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூர் அருகே கோவில் பூசாரி குத்திக் கொலை

கடலூர்:
 
        கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 60). இவருக்கு ஜெயலட்சுமி, பிரேமலதா ஆகிய 2 மனைவிகளும், 4 மகள்களும் உள்ளனர்.

              காத்தமுத்து அந்த ஊரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மாலையில் பூஜை முடிந்ததும் இரவு சாப்பிட்டு விட்டு கோவிலி லேயே அவர் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவு காத்தமுத்து சாப்பிட்டு விட்டு கரைமேடு கிராமத்தில் நடந்த தெருக் கூத்து நிகழ்ச்சிக்கு சென்றார்.

             நள்ளிரவில் 2 மணியளவில் அவர் கோவிலுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் பின் புறத்தில் காத்தமுத்து பிணமாக கிடந்ததை கண்டனர்.  அவரது தலையில் கடப்பாரையால் குத்தப்பட்ட காயம் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை கொள் ளையடிக்க வந்தபோது அதனை தடுத்த காத்த முத்துவை அந்த ஆசாமிகள் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

                மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் கோவிலில் இருந்து குளக்கரை வழியாக ஓடி அங்குள்ள ஏரிக்கரை மேட்டில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகை முன்பு நின்றது. போலீசார் அந்த மோட்டார் கொட்டகையை சோதனையிட்ட போது மோட்டார் கொட்டகை முன்பு 5 பீர் பாட்டில்கள் கிடப்பதை கண்டனர்.

              கோவில் பூசாரி காத்தமுத்துவை கொன்ற வர்கள் முன்னதாக மோட்டார் கொட்டகையில் மது அருந்திவிட்டு இந்த கொலை யை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் பூசாரியை குத்திக் கொன்ற சம்பவம் கோதண்டராமபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior