தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு "ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) வியாழக்கிழமை (ஜூன் 16) வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர 21,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்ப ஆய்வுக்குப் பிறகு, சில விண்ணப்பங்களை நிராகரித்தது போக 20,765 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை ரேங்க் பட்டியலில் வரிசைப்படுத்த "ரேண்டம் எண்' வழங்கப்படுகிறது.
சுகாதாரத் துறையின் இணையதளம் http://www.tnhealth.org/ மற்றும் அரசின் இணையதளம் http://www.tn.gov.in/ ஆகியவற்றில் ரேண்டம் எண் விவரத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்ப எண்ணைப் பூர்த்தி செய்து 10 இலக்க "ரேண்டம் எண்ணை' தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 21-ல் ரேங்க் பட்டியல்:
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக