விருத்தாசலம்:
விருத்தாசலத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் நகர இளைஞரணி ஆலோசனை கூட்டம் இளைஞரணி தலைவர் பாபு கணேஷ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சத்தியராஜ், அப்துல்அஜிம், வேலய்யன், ஈஸ்வர், சையத் மூசா, போக்கிரி, வாசு, அன்சர்அலி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ. சந்திரசேகர், மாநில நிர்வாகி புஸ்சி ஆனந்த் ஆகியோர் வழி காட்டுதலுடன் சமூக பணி ஆற்றுவது. நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி ரத்ததானம் வழங்குவதும், ஏழை- எளிய மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதும், மேலும் விஜய் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்குவதும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக