தமிழ்நாட்டில் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாமல் செயல்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக 40 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. மே மாதம்இறுதியில் 21 முதல்வர்கள் ஓய்வு பெற்றனர். இதனால் இவற்றின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. ஒரே ஒரு அரசு கல்லூரியில் மட்டும்தான் முதல்வர் உள்ளார். இதேபோல கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடம், இணை இயக்குனர் பணியிடம் இரண்டும் காலியாக இருக்கின்றன. 7 கல்வியியல் கல்லூரியிலும் முதல்வர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
6 மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் பதவிகளில் 4 இயக்குனர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. உயல் கல்வி துறையில் உள்ள அரசு கலைக் கல்லூரி களில் முதல்வர்கள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரிகளில் பணியாற்றும் சீனியர்கள் முதல்வர்கள் பொறுப்பை கவனித்து வருகிறார்கள். தற்போது அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. குறைந்த அளவில் உள்ள இடங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பி.ஏ.ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் வேளையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாமல் இருப்பதால் சேர்க்கை பணி பாதிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக