உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 17, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) வனப்பகுதியில் திடீர் தீ

கடலூர்:
 
            கடலூர் கடற்கரை வனப் பகுதியில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது.  

            கடலூர் கடற்கரையில் தேவனாம்பட்டினம் முதல் அக்கரை கோரி வரை, வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதி உள்ளது. இங்கு சவுக்கு மரங்கள் அதிக அளவில் உள்ளன.  தேவனாம்பட்டினம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில், வியாழக்கிழமை திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. சவுக்கு மரங்களில் இருந்து உதிர்ந்து கிடக்கும் இலைகள், சருகுகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

              சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளில் தீப்பற்றி, மரங்களுக்கும் பரவி வருகிறது.  சவுக்குத் தோப்புக்குள் தீயணைப்பு வண்டிகளும் செல்ல முடியவில்லை. எனவே வனத்துறை ஊழியர்கள், தோப்புக்குள் புகுந்து, கடற்கரை மணலைத் தூவி தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற பகுதிகளுக்கு தீ பரவாதவாறு தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior