ராசிபுரம், ம.தி.மு.க நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் கந்தசாமி, பா.ம.க மாநில மாணவரணி செயலாளர் நல்வினை விஸ்வராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜாமுகமது உட்பட சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருக்கும் எஸ்.ஆர்.வி ஹை டெக் பள்ளியில் +2 படித்துக் கொண்டிருந்த 17 வயதான மாணவி ரபிதுல் அச்சாரியா (கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா மகள்) கடந்த 13.06.2011 அன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது பற்றி நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல், மனித உரிமை அமைப்பினர், வழக்குரைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டது. மாணவி, என்ன காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார் என்பதை கண்டுபிடித்து, விசாரணை அறிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.
தமிழக பள்ளியில் தொடர்ந்து நடந்து வரும் மாணவ , மாணவவியரின் தற்கொலைகள், பள்ளியிலிருந்தும், விடுதியிலிருந்தும் மாணவ மாணவியர்கள் பாதியில் ஓடிப்போவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசும், கல்வித்துறையும் இணைந்து திட்டமிடவேண்டும் என்பதையும் வழியுறுத்தியும். மாணவியின் தற்கொலைக்கு காரணமான, அல்லது தற்கொலைக்கு தள்ளிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வரும், 20 தேதி மாலை நான்கு மணிக்கு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில், அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்து. அந்த கண்டன கூட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தையார் முகமது அலி ஜின்னாவும் கலந்துகொள்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக