உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

கடலூரில் மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின

கடலூர் : 

         கடலூரில் கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் ஐந்து டன் அளவிற்கு பால் சுறாக்கள் சிக்கின. 

          கடலூர் பகுதி மீனவர்கள் தினசரி 100 விசைப் படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு அதிக அளவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்தி, சங்கரா போன்ற மீன்களே வலையில் சிக்கின. அந்த மீன்களும் குறைவான அளவே சிக்கியதால் மீனவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
            இந்நிலையில் நேற்று விடியற்காலை வழக்கம் போல் மீனவர்கள் மீன் பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். மீன்கள் கிடைக்காததால் சில மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். இவர்களின் வலையில் ஏராளமான சுறா மீன்கள் சிக்கின. இதில் அதிகபட்சமாக சில சுறா மீன்கள் 7 அடி நீளமும் 600 கிலோ எடை கொண்டிருந்தன. இதன் துடுப்புகள் (பீலி) ஓன்னரை அடி நீளம் இருந்தன. பெரும்பாலான சுறா மீன்கள் 50 முதல் 70 கிலோ எடை கொண்டிருந்தன. இவை அனைத்தும் ஐந்து டன் எடை இருந்தன. 

          அனைத்து பால் சுறாக்களும் நேற்று மாலை லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் சுறா மீன் இருக்கும் பகுதிகளில் பிற மீன்கள் இருக்காது. இதன் காரணமாகவே நேற்று மீனவர்களின் வலையில் பிற மீன்கள் சிக்கவில்லை எனவும், மீன் பிடி தடைக்காலம் முடிந்த பிறகு அதிக அளவு சுறா மீன் சிக்கியது இதுவே முதல் முறை என மீனவர்கள் தெரிவித்தனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior