உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

சி.ஏ., படிப்புக்கு இனி நுழைவுத் தேர்வு இல்லை:ஐ.சி.ஏ.ஐ., தலைவர் தகவல்

               பட்டப்படிப்பில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவோர், இனி சி.ஏ., படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை' என, இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) தலைவர் ராமசாமி கூறினார்.

இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) தலைவர் ராமசாமி கூறியது:

             வெளிநாட்டு வங்கிகளில் நம் நாட்டினர் சேமித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை, இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து ஆராய, எங்கள் நிறுவனம் ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் பயன்பாடு குறித்த ஒரு ஆய்வறிக்கையையும் மத்திய அரசிடம் தந்துள்ளோம்.
 
           எங்கள் நிறுவனம் சார்பில், உலக வணிக கல்வி மாநாடு, அடுத்த மாதம் 15ம் தேதி, டில்லியில் நடக்கிறது. ஐ.சி.ஏ.ஐ., நிறுவனத்தின் சிறப்பம்சங்களை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, அடுத்த மாதம் டில்லியில் நடக்கிறது.பி.காம்., பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணும், மற்ற இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவோர், இனி ஐ.சி.ஏ.ஐ.,யில் சி.ஏ., படிக்க, நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை.
 
           வரும் டிசம்பர் முதல், இம்முறை அமலுக்கு வரும்.நிறுவன உறுப்பினர்களுக்கு, வணிகம் மற்றும் நிர்வாகவியல் சார்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் வாய்ப்பு தரும் வகையில், ஐ.சி.ஏ.ஐ., - சென்னை பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இணையதள வழி கல்வி விரைவில் துவங்க உள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடந்த, "கேம்பஸ் இன்டர்வியூ'களில், எங்கள் நிறுவனத்தில் படித்த 5,375 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ராமசாமி கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior