நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி. இவர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில் 2009-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கன்வேயர் பெல்ட் அமைக்க சாதனங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.40 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. என்.எல்.சி. நிறுவனம் உள்பட 9 இடங்களில் 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனாலும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் என்.எல்.சி. சேர்மன் முறைகேடு செய்துள்ளார். ரூ.10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரும்படி கூறினார்கள்.
இதையடுத்து செல்வராஜ் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி யூசுப் அலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக