சிதம்பரம்:
தம்பரம் நகர காவல் நிலையம் முகப்பில் இருந்த நூறாண்டு கால நாவல் மரம் ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்த பலத்த காற்று, மழையில் சாய்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மேலரதவீதியில் நகர காவல் நிலைய முகப்பில் வலது புறம் இருந்த நூறு ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய நாவல் மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் மேலரதவீதியில் சிறது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்ததில் காவல்நிலையத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சிக்கி சேதமடைந்தது.
காவல் நிலையத்தில் நாவல் மரத்துக்கு முன்புதான் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் மரம் சாய்ந்து விழுந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் புகார் ஒன்றுக்கு சென்று விட்டு சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் வேன் மீது மரம் விழாமல் தப்பியது. நகர காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக 1904-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே வேளையில் நூறு ஆண்டுகளை கடந்த மரம் காற்றில் தானாகவே விழுந்தது குறித்து அனைவரும் ஆச்சரியத்துடன் பேசி சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக