உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12 கல்வியாண்டு முதல் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்த இரண்டாண்டு எம்.பி.ஏ. படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

 இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன் சென்னையில்  கூறியது:

             வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, உயர் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை 12 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இதைக் கருத்தில் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் கூடுதலாக 18 தொலைதூரக் கல்வி மையங்களை விரைவில் தொடங்க உள்ளதோடு, 9 மையங்களை வெளிநாடுகளில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். 

                இதன் தொடர்ச்சியாக இப்போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. படிப்பை ஆன்லைனில் வழங்க உள்ளோம். இந்தத் திட்டத்தின்கீழ் பாடங்கள் அனைத்தும் ஆன்லைனில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். தேர்வை அருகில் உள்ள மையத்துக்குச் சென்று எழுத வேண்டும். 

இந்தப் படிப்புக்கான முதலாண்டு கட்டணம் ரூ.17,000, 
இரண்டாம் ஆண்டுக் கட்டணம் ரூ.15,000 

ன்றார் ராமநாதன்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior