விழுப்புரம் மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வினித்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
இதில் செஞ்சி ஆய்வாளர் சிங்காரவேலு சத்தியமங்கலத்துக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் இளங்கோவன் மரக்காணத்துக்கும், ரோஷணை அரவிந்தன் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும், மரக்காணம் சேகர் வடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வளவனூர் ஆய்வாளர் சந்திரபாபு சேத்தியாதோப்புக்கும், விக்கிரவாண்டி ஸ்ரீதரன் வேப்பூருக்கும், வானூர் கண்ணதாசன் ஊ. மங்கலத்துக்கும், வளத்தி மணவாளன் பென்னாடத்துகும், விழுப்புரம் நகரம் ஷியாம் சுந்தர், கடலூர் திருப்பாப்புலியூருக்கும், தியாகதுருகம் ரவிக்குமார் ராம நத்தத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரிலிருந்த ஆய்வாளர் முரளி வானூருக்கும், பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணன் ரோஷணைக்கும், நெய்வேலி ராமநாதன் செஞ்சிக்கும், ராமநத்தம் பிரதீப்குமார் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருப்பாப்புலியூரிலிருந்த சுந்தரவடிவேல் நெய்வேலி தெர்மலுக்கும், அண்ணாமலை நகர் சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டைக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி திருக்கோவிலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்த சங்கர் கஞ்சனூருக்கும், ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்த சுகுமாறன் வளவனூருக்கும், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு சந்திரசேகரன் குமராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக