உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் கப்பல் கட்டும் தொழிசாலைக்கு நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து சைக்கிள் பேரணி

சிதம்பரம்:

            பரங்கிப்பேட்டை அருகே தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

              பரங்கிப்பேட்டை அருகே அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும் தொழிசாலை, சாயக்கழிவு தொழிற்சாலை என 9 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு பரங்கிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள 75 கிராமப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.குறைந்த விலைக்கு நிலம் வாங்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டித்தும், தொழிற்சாலைகள் அமைவதால் ஏற்படும் தீமைகளை விளக்கியும் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

             பேரணி பரங்கிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சின்னூர், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 23 கிராமங்கள் வழியாக சென்றது. ஒவ்வொரு கிராமத்தில் கே.பாலகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார். பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் கற்பனைச்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் இளம்பாரதி, கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சம்பத், உலகநாதன், தனபால், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior