உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

நவீன வசதிகளுடன் தமிழக அரசின் இணையத்தளம்

         தமிழக அரசின் வெப்சைட்டுகள் இன்னும் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன்பின், நவீன வசதிகளுடன் கூடிய "ஸ்டேட் போர்டல்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்,' என்று தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் சந்தோஷ்பாபு கூறினார்.

சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கை துவக்கி வைத்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பேசியது: 

                 அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டுசெல்லும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை நகரில் அரசு திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது. கிராமப்புறங்களில் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், ரேஷன் கார்டு பெற ஒருநாள் முழுவதும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால், ஒருநாள் சம்பளமும் இழக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

             அதன்படி, அனைத்து அரசு துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. அனைவருக்கும் அரசின் சேவை சென்று சேரும் வரை மின்ஆளுமை வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. எனவே, என்னென்ன சேவைகள் மக்களுக்கு நேரடியாக வழங்க முடியும் என்பதை அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையும் ஐந்து சேவைகளை அடையாளம் காணப்பட்டால், மின்ஆளுமை செயல்வடிவம் பெற உதவும். இதற்கு எல்காட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவு தர தயாராக உள்ளன.

               முன்னோடி திட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்ஆளுமை அமலில் உள்ளது. அந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் ஜாதி, இருப்பிடம், வணிகவரி, முதல்தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட சான்றுகள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே பெற முடிகிறது. இது தவிர ஏழை பெண்கள் திருமண உதவித் தொகை, மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பேசினார்.


 தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் செயலர் சந்தோஷ்பாபுபேசியது: 

                "தற்போது தமிழக அரசின் வெப் சைட் செயல்படுகிறது. இந்த வெப் சைட் 30 நாட்களுக்கு பின், புதிய வடிவம் பெற உள்ளது. இந்த புதிய "ஸ்டேட் போர்டல்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தினால் அனைத்து சான்றுகள் பெறுவதோடு, விண்ணப்பங்களை பெற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது,' என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, தகவல் தொழில்நுடப் செயலர் சந்தோஷ்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறையின் இணை செயலர் அஜய்குமார், நாஸ்காம் மண்டல இயக்குனர் புருஷோத்தம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.MORE DETAILS


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior