உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை

 http://dinamani.com/Images/article/2011/8/4/3ehelp.jpg


நெய்வேலி:

           உயர்கல்வி பயில வாய்ப்புக் கிடைத்து, கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவியின் நிலைக் குறித்து தினமணியில் ஜூலை 14-ம் தேதி வெளியிட்ட செய்தியை பார்த்து, தினமணி வாசகர்கள் ரூ.50 ஆயிரம் உதவியாக வழங்கியுள்ளனர்.

               நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ட்ராஃப்ட்ஸ்மேன் பிரிவில் 1,131 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 2-ம் இடம்பிடித்தவர் மாணவி ஆர்.அனிதா.தற்போது சென்னை ஜேப்பியார் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துவரும் தொழிலாளி. மாணவியின் நிலை குறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து அவரது உயர்கல்விக்கு உதவ முன்வருபவர்கள், மாணவி பயின்ற என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தொலைபேசி வாயிலாக தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

           இச் செய்தியைப் படித்த பலர், மறுநாளே பள்ளித் தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு, பணம் எவ்வாறு அனுப்புவது, யார் பெயருக்கு அனுப்புவது என விவரம் கேட்டறிந்தனர். இதில் சில வெளிநாடு இந்தியர்களும் அடங்குவர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை விளக்கிய பின்னர், ஒவ்வொருவராக பள்ளியின் முகவரிக்கு காசோலைகளை அனுப்பினர், இவ்வாறு தினமணி செய்தியின் வாயிலாக கிடைத்த பணம் ரூ.50 ஆயிரத்து 500. இத் தொகையை மாணவி ஆர்.அனிதாவிடம், பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ். மணிமொழி புதன்கிழமை வழங்கினார்.

              தினமணி வாசகர்கள் வழங்கிய தொகையை தவிர்த்து,குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் ரூ.5 ஆயிரமும், பள்ளித் தலைமை ஆசிரியை ரூ.15 ஆயிரமும் கூடுதலாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவியின் உயர்கல்விக்கு உதவிய தினமணி வாசகர்களுக்கும், தினமணி நாளிதழின் நிர்வாகத்துக்கும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதுபோன்று உமா என்ற மாணவிக்கும் 2009-ம் ஆண்டு தினமணி நாளிதழ் உதவி புரிந்ததையும் தலைமை ஆசிரியை நினைவுகூர்ந்தார். 

நன்றி: 

               தினமணி நாளிதழ் வாயிலாக எனது கல்விக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இது என் வாழநாளில் மறக்க முடியாத ஒரு உதவி எனவும் ஆர்.அனிதா தெரிவித்தார்.


இந்த செய்தியை நாமும் வெளியிட்டோம்ல 

 ஜூலை 15ல்

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு உதவுங்கள்

 

 

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior