இளையராஜாவை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் நகருக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா, நடராஜர் கோயில், தில்லையம்மன் கோவில்களுக்கு சென்று புதன்கிழமை வழிபாடு செய்தார்.
சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தார் இளையராஜா. அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கிய அவர், புதன்கிழமை காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அப்போது கோயில் பொதுதீட்சிதர்கள் மாலை, பட்டு அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவிலில் உள்ள ஆதிமூலநாதர், முக்குறுணி விநாயகர், சிற்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளை தரிசித்தார். பொதுதீட்சிர்கள் சிறப்பு தீபாராதனை செய்து பிரசாதத்தை வழங்கினர்.
முன்னதாக சிதம்பரத்தின் எல்லையில் உள்ள தில்லையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள தில்லையம்மனையும், தில்லைக்காளியையும் வழிபாடு செய்த பின்னர் அவர் புறப்பட்டு சென்றார். இளையராஜாவுக்கு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சதீஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக