உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 31, 2012

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம்

சிதம்பரம் :

கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம் கல்லூரியின் நூலக அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஆலோசகர் கனகசபை  முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நர்மதை வரவேற்றார். கல்லூரி நிறுவனத் தலைவர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலர் பாபு  வாழ்த்திப் பேசினார். கற்றல் கோட்பாடுகள், கற்பித்தல் நெறிமுறைகள் பற்றி துறைத் தலைவர்கள்  கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் பேராசிரியர் இளங்கோ துறை வாரியான முன்னேற்றம் குறித்து  பேசினார்.




Read more »

சனி, ஜூலை 28, 2012

மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களுக்கு நடப்பு ஆண்டில் 341 பசுமைவீடுகள் ஒதுக்கீடு

சிறுபாக்கம்:


            மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களுக்கு நடப்பு ஆண்டில் 341 பசுமைவீடுகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

    .மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளுக்கு நடப்பாண்டில் முதல்வரின் பசுமை வீடுகள் 163 வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழ்ஒரத்தூர் 5, அடரி 5, மாங்குளம் 10, சிறுபாக்கம் 10, வடபாதி 15, ஒரங்கூர் 10, வினாயகனந்தல் 5, கழுதூர் 5.ம.புடையூர் 5, கொரக் கவாடி 5, ஆலத்தூர் 10, தொழுதூர் 5, ராமநத்தம் 8, ஆலம்பாடி 10, ஈ.கீரனூர் 5, சிறுமுளை 5, போத்திரமங்கலம் 5, ஆவினங்குடி 5, வள்ளிமதுரம் 10, அரங்கூர் 5, ஆவட்டி 5, எஸ்.புதூர் 10, தச்சூர் 5 ஆகிய 163 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஒன்றியம்:


64 ஊராட்சிகளில் 20 ஊராட்சிகளுக்கு 178 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நகர் 13, பெரியநெசலூர் 5, வேப்பூர் 5, ஆதியூர் 5, நல்லூர் 5, பிஞ்சனூர் 5, சாத்தியம் 5, வலசை 13, ஆதமங்கலம் 13, இறையூர் 5, கொசப்பள்ளம் 5, குருக்கத்தஞ்சேரி 13, துறையூர் 5.வெண்கரும்பூர் 5, அருகேரி 13, கோனூர் 13, கொத்தட்டை 5, நரசிங்கமங்கலம் 13, வடகரை 16, தொளார் 16 ஆகிய ஊராட்சிகளுக்கு மொத்தம் 178முதல்வரின் பசுமைவீடுகள் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


       ஒவ்வொரு வீடுகளும் தலா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் வசதியுடன் கட்டப்படும். இதற்கான பயனாளிகள் கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read more »

வியாழன், ஜூலை 26, 2012

வயலில் பரண் அமைத்து ஆடு வளர்க்கும் எம்.பி.ஏ.பட்டதாரி

பெண்ணாடம் :


பெண்ணாடம் அருகே இளைஞர் ஒருவர் பரணி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.


 
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பாரதிதாசன்
பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் வரும் இவர் தற்போது  தனது வயலில் பரண்அமைத்து ஆடு வளர்த்து வருகிறார்.


இது குறித்து மகேந்திரன் கூறியது:


பத்து சென்ட் இடத்தில் கூரை கொட்டகை போட்டு, 3 அடி உயரத்திற்கு மரப்பலகையால் பரண் அமைத்து அதில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், சேலம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொடி ஆடு,
தலைசேரி ஆடு, போயர் ஆடு, பல்லாடு உள்ளிட்ட பல்வேறு வகையான 50 ஆடுகளை  வளர்த்து வருகிறேன். ஆட்டிற்கு உணவளிக்க 2 ஏக்கர் பரப்பளவில் கோ-4, வேலி  மசால், குதிரை மசால் ஆகிய புல் வகைகளை பயிர் செய்து ஆடுகளுக்கு வழங்குகிறேன். ஆடுகள் பரண் மீது வளர்வதால் அதன் கழிவுகள் தரையில் விழும்படி  அமைத்துள்ளேன். மேலும், ஆடுகளை மோட்டார் தண்ணீரில் குளிப்பாட்டி விடுவேன்.  இதனால் ஆடுகள் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கின்றன. ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லாமல் கொட்டகைக்குள்ளேயே வளர்வதால் ஆடுகளின்  எடை கூடி குறுகிய காலத்தில் பெரிதாக வளர்ச்சியடைகின்றன. இந்த ஆடுகளை மொத்தமாகவும், வளர்ப்பிற்கு சில்லரையாகவும் 2,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய் வரை விற்கிறேன். ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக சொந்த வயலில் பயன்படுத்துகிறேன். மீதமுள்ளவற்றை டன் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை  விற்பனை செய்கிறேன். இவ்வாறு அவர்கூறினார். இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் பரணில் ஆடு வளர்க்க ஆயத்தமாகி வருகின்றனர்.

Read more »

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்

கடலூர் :

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து வருமான வரித்துறை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வருமானவரித்துறை சார்பில் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது.  நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் மாளிகையிலும், சிதம்பரம் அண்ணாமலை  நகர், விருந்தினர் மாளிகை சென்ட்ரல் ஹாலிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். கடலூர் மற்றும் விழுப்புரம் வருமான வரி அலுவலகங்கள் வரும் 28, 29ம்  தேதிகளில் விடுமுறை நாட்களிலும் செயல்படும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வருமான வரி படிவங்களை தாக்கல்  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read more »

புதன், ஜூலை 25, 2012

Two Dalit families freed from bonded labour


FREEDOM BECKONS: The rescued Dalit families at Karadiyan Naickanur in Erode district


       Two Dalit families employed as bonded labourers in a brick kiln at Karadiyan Naickanur in Erode district were rescued on Tuesday.

         On Monday, G. Kalaiselvan (31) of Nanjaimagathu Vazhkkai in Chidambaram taluk and K. Sivakumar (27) of Reddiar Mill area in Villupuram district escaped from the kiln and made a representation to Cuddalore Collector Rajendra Ratnoo stating that the owner was holding their wives and children hostage and had threatened to kill the women. Mr. Ratnoo alerted his Erode counterpart V.K. Shanmugam, who deputed officials to rescue the women and children.  Those freed from the clutches of the kiln owner are Mr. Kalaiselvan’s wife K. Indhumathi (26) and their children K. Jeeva (8), K. Swathi (6) and K. Deva (4), and Mr. Sivakumar’s wife S. Sivagami (25) and their children S. Soundarya (3) and 10-month-old S. Surya.

         Mr. Kalaiselvan in the petition stated that three Dalit families were employed at the kiln owned by B. Gurudevan. Two years ago they were engaged by Somu of Mayavaram to be employed in the kiln of Kittusamy. After serving there for a year they were shifted to the kiln of Rajendran. Later, Mr. Gurudevan paid Rs.85,000 to Rajendran to send the three families to work in his kiln.  They joined the new kiln on July 9. The very next day Mr. Gurudevan, his wife Vijayalakshmi and brother-in-law Venkat started abusing them and imposing unusual conditions on the families. M. Nizamudeen of the Consumer Federation-Tamil Nadu, R. Babu of the Social Awareness Society for Youths, T. Arul Selvan of the SIPCOT Social Environment Monitor, who took up their cause, thanked the Collectors for their speedy action.

Read more »

செவ்வாய், ஜூலை 24, 2012

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம்

கடலூர் :


மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


மக்கள் தொகை பெருக்கத்தைப்போல விபத்து மூலம் மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலைமதிப்பற்ற மனித உயிர் சாலை விபத்துகளில் பறிக்கப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், சென்டர் மீடியன், புறவழிச்சாலை என அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை. போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்டிக்கும் விதமாக இந்த ஸ்பாட்பைன் அமல்படுத்தப்பட்டுள்ளது.


          முதலில் சென்னை மாநகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.போக்குவரத்துக் குற்றம் குறைந்ததால் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இது விரிவுப்படுத்தப்பட்டது.  இந்த ஸ்பாட்பைன் போடும் திட்டம் கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

ஸ்பாட்பைன் என்றால் என்ன?

      சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ள்ளவர்கள் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பர். அந்த அபராதத் தொகையை இன்ஸ்பெக்டரிடம் செலுத்தி, ரசீது பெற்ற பிறகே வாகனத்தை எடுத்துச்செல்ல முடியும்.

இது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் கூறியது:

         மோட்டார் வாகன சட்டம் 177 ன்படி ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, தலைக்கவசம் அணியாதது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றிக்கு முதல் முறை 100 ரூபாயும், இரண்டாம் முறை 300 ரூபாய் வசூலிக்கப்படும்.
பிரிவு 179ன்படி பொய்யான தகவல் தருவது, 181, 182 (1) லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது ஆகியவற்றிக்கு500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
பிரிவு 183 (1)ன் படி வேகமாக வாகனம் ஓட்டுனால் முதல்முறை 400 ரூபாயும். 2வது முறையாக 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
காற்று மற்றும் ஒலி மாசுபடுத்துதல், பதிவு செய்யாமல் வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமான எடை ஏற்றிச் செல்லுதல், வாகனங்களுக்கு காப்பீடு செய்யாமல் ஓட்டுவது ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடலூரில் இன்று (நேற்று) ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டிய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழிப்புணர்வு பேரணி
கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஒட்டிகள் மீது ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசார் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கடலூர் டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், விஜயபாஸ்கர், விஸ்வநாதன் மற்றும் போலீசார்பங்கேற்றனர்.
கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி செம்மண்டலம், ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் அண்ணா பாலம் வரை சென்றது.

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைகைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம் :

சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரி 2012-13ம் கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (24ம் தேதி)  கல்லூரி நூலகத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் கலந்தாய்வுக் கூட்டத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் பி.சி., எம்.பி.சி., எஸ்.டி., எஸ்.சி பிரிவைச் சேர்ந்த மாணவ,  மாணவியர்கள் பங்கேற்கலாம். மற்ற பிரிவினர்களில் பாடப் பகுதி 3ல் 800க்கு  375க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள்  இருந்தால் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும். இத்தகவலை கல்லூரி முதல்வர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.




Read more »

திங்கள், ஜூலை 23, 2012

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான  விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு  படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் 30 அன்று ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.


எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில்பணிபுரிபவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக்  கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி  பயில்வோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் . மனுதாரர்கள்கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக  விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பம் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படுகிறது. இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வெள்ளி, ஜூலை 20, 2012

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.க்கு தகுதி

நெய்வேலி :

ஐ.ஐ.டி.,க்கு தேர்வு பெற்ற நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களை என்.எல்.சி., சேர்மன் பாராட்டி பரிசு வழங்கினார். நெய்வேலி தெலுங்கு சமிதியின் ஆதரவுடன் கடந்த 2005ம் ஆண்டு முதல்  என்.எல்.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் ஜவகர் சி.பி. எஸ்.இ., மேல்நிலைப்  பள்ளியில் ஐ.ஐ.டி., நிறுவனங்களில் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்  தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் டில்லி, விஜயவாடா, கோட்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களில்  ஐ.ஐ.டி.,நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான நிபுணர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.  ஆண்டுதோறும் இப்பள்ளியிலிருந்து 15 முதல் 20 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில இடம் பெறுகின்றனர். இந்த ஆண்டு 63 பேரில் 25 பேர்கள் ஐ.ஐ.டி.,க்கு தகுதி பெற்றனர். எஞ்சிய மாணவ, மாணவிகள் பிட்ஸ் பிலானி மற்றும் என். ஐ.டி., போன்ற நாட்டின் உயர்ந்த பிற கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி தெலுங்கு சமிதியில் பாராட்டு விழாநடந்தது. என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். சேர்மன் சுரேந்தர் மோகன் துணைவியார் சொர்ணகுமாரி, யோகமாயா  ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். முதன்மை பொது மேலாளர் மற்றும் தெலுங்கு  சமிதி தலைவர் வீரபிரசாத் வரவேற்றார்.


என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் பரிசு வழங்கிப் பேசுகையில்,

தமிழகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அதிகபட்சமாணவர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளது பராட்டுக்குரியதாகும் என்றார். ஏற்பாடுகளை தெலுங்கு சமிதி தலைமை நிர்வாகிகள் சுப்பாராவ், ரகுமான் உட்பட பலர் செய்திருந்தனர்.



Read more »

கடலூரில் கடலூரில் மூலிகை தொழில் பயிற்சிக்கான அறிமுக நிகழ்ச்சி

கடலூர் :


மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பு சார்பில் மூலிகை தொழிற் பயிற்சி கடலூரில் வரும் 23ம் தேதி நடக்கிறது. மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பு சார்பில் மூலிகை தொழிற் பயிற்சி கடலூர் மஞ்சக்குப்பம்பிள்ளையார் கோவில்எதிரில் உள்ள சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேத மருத்துவமனையில் மூன்று நாட்கள் நடக்கிறது.  இதற்கான அறிமுக நிகழ்ச்சி வரும் 23ம் தேதி கடலூரில்நடக்கிறது. இதில் மூலிகை தொழிற் பயிற்சி பற்றியும், தொழிலைப் பற்றிய விற்பனை  வாய்ப்புகள், வைத்தியத்திற்கான லைசன்ஸ் பெறும் முறைகள் குறித்து  விளக்கப்படும்.  இந்த அறிமுக நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மூலிகை ஆர்வலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க உள்ளவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்களுக்குமட்டுமே அனுமதி வழங்கப்படும்.  முன்பதிவு செய்ய 93676 22251, 93676 22254 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என சுசான்லி குருப்ஸ் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.



Read more »

சனி, ஜூலை 14, 2012

கடலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்தகுதியானவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

    கடலூர் மாவட்டத்தில் 2012-13 ஆண்டிற்கு ஊட்டச்சத்து பாதுகாப்பின் வழியாக தீவிர ஆறு தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு பணி நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2013 வரை ஆறு மாதங்கள் பணி புரிய இரண்டு பணியிடங்களுக்கு பி.எஸ்சி., (விவசாயம்) அல்லது பட்டயப்படிப்பு (விவசாயம்) கல்வித் தகுதியாக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் 8,000 ரூபாய் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை

வேளாண் இணை இயக்குனர்,
செம்மண்டலம்,
கடலூர் - 607 001

என்ற விலாசத்திற்கு வரும் 25ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பி.எஸ்சி., (விவசா யம்) படித்தவர்கள் எவரும் விண்ணபிக்காத நிலையில் பி.எஸ்சி., (அறிவியல்) பட்டப்படிப்பு முடித்தவர்கள், பட்டயப் படிப்பு (விவசாயம்) ஓய்வு பெற்ற பி.எஸ்சி., (விவசாயம்) நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புதன், ஜூலை 11, 2012

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி முதல் ரேங்க்

.கடலூர் :

கடலூர் கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவி பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர்  கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ.,  படிக்கும் மாணவ, மாணவிகள் அண்மையில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய  செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி சகிகலா பல்கலைக்கழக அளவில் முதல்  ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதேப்பேன்றுபத்மபிரியா, ஸ்ரீலலிதா,  தமிழ்ச்செல்வி,பிரதிபா மற்றும் ராஜிராணி ஆகியோர் தரவரிசையில் முறையே 13,  20, 34, 34, 45வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர்முதன்மைச் செயலர் அலுவலர் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.
.

Read more »

திங்கள், ஜூலை 09, 2012

TNPSC GROUP IV (GROUP IV) ANSWER KEYS

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு

.சிதம்பரம்:

   சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் இரண்டாம்கட்ட கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடக்கிறது.


இது குறித்து சி.முட்லூர் அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வைத்தியலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இரண்டாம்  கட்ட கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர் மற்றும் அருந்ததியினர் பிரிவில் மட்டும் சில இடங்கள்காலியாக உள்ளன.எனவே இப்பிரிவு மாணவர்கள், முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைக்காதவர்கள், தாமதமாக விண்ணப்பித்தவர்கள் உரிய மூலச்சான்றுகளுடன் வரும் 11ம் தேதி 9 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாம் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலாமாண்டு  மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படஉள்ளது.
.

Read more »

சனி, ஜூலை 07, 2012

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு

கடலூர்,:


கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண்மை துறையில் நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள அலுவலர்கள் குழுவிற்கு சிறப்பு 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.


புவியியல் ரீதியாக உலக வரைப்படம் உள்ளது. இதி லிருந்து பல்வேறு தகவல்கள் பெற வழிகாணப்பட்டுள் ளது. செயற்கை கோள் உதவியுடன் புவி அமைப்பு அதன் பல்வேறு இடங்களின் தன்மை துறை ரீதியாக தகவல்கள் பெற வழி உண்டு.  இதில் வேளாண்மை துறையில் அதற்கேற்ப தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலத்தடி நீர், மண் உள்ளிட்டவை களின் தன்மை குறித்து விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்று தரும் பணியை மேற்கொள்ள உள்ளது.


முதல் முறையாக இது போன்ற திட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது இதற்காக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தேசிய கணினி மையம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பூலோக வரைப்படத்தில் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தன்மை, மண் வளம் குறித்து தகவல்களை செயற்கோள் மூலம் பெற்று பதிவு செய்யும். இக்குழுவுக்கு 5 நாள் பயிற்சி கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற் பொறியாளர் சங்கரசேகர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். புவி தகவல் தொழில்நுட்பம் பற்றி பிரவு தொகுப்புரையாற்றினார். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக் காக செயல்படுத்தப்படும் திட்டகளான தடுப்பணை, குளம் அமைப்பது உள் ளிட்டவைகளுக்கு திட்டத் துக்கு தேர்வு செய்யப்படும் இடம் உரிய பயனை தருமா என்பதற்கு புவி அமைப்பில் இருந்து செயற்கைகோள் மூலம் பெறப்படும் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


இது போன்று மண்ணின் தன்மை அறிந்து கொள்வதால் வேளாண்மை செழிப்பிற்கு வழிவகை செய்யும். இது போன்ற திட்டங்கள் அரசு திட்ட செயல்பாட்டுக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் பலன் தரும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மை செயல்பாடுகளுக்கு சரியான இடத்தை தேர்வு செய்ய புவி அமைப்பு தகவல் வழிகாட்டும் என்றனர் சம்மந்தப்பட்ட துறையினர்.




Read more »

வெள்ளி, ஜூலை 06, 2012

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Read more »

வியாழன், ஜூலை 05, 2012

கடலூர் மாவட்டத்தில் இருந்து டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு 55 ஆயிரம்பேர்பங்கேற்பு

கடலூர்:

       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப்-4க்கான தேர்வு வரும் 7ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து 55 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதுகின்றனர்.அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரத்து 35 பேர் 101 மையங்களில் 2,827 ஹால்களில் தேர்வு எழுதுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 161 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


         விடைத்தாள்களை சேகரித்து கருவூலத்தில் செலுத்த 20 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நடமாடும் குழுவும் 5 பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையங்களில் தவறு நடைபெறாமல் இருக்க முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 7ம் தேதி குரூப்-4க்கான தேர்வு காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பிற்பகல் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள இ.ஓ., பதவிக்களுக்கான தேர்வு 3 முதல் 5 மணி வரை நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்திற்கு வருகை தர வேண்டியுள்ளதால் தேர்வர்களுக்கு வசதியாக அனைத்து பகுதியில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று லாரி மூலம் எடுத்து வரப்பட்டு கடலூர் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது



Read more »

புதன், ஜூலை 04, 2012

கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தி..மு.க., சிறை நிரப்பும் போராட்டம்

கடலூர்:


     அ.தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.

தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

     ஜெ.,ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் 8 இடங்களில் இன்று (4ம் தேதி) சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. மாவட்ட, கோட்ட, வட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற் குமாறு கேட்டுக் கொள்கிறேன்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior