உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நகரமன்ற கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகரமன்ற கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 05, 2011

கடலூரில் சாலைகள் அமைக்க மேலும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு

டலூர்:

              கடலூரில் சாலைகள் அமைக்க தமிழக அரசு மேலும் ரூ. 10 கோடி வழங்கி இருப்பதாக, நகராட்சித் தலைவர் து.தங்கராசு திங்கள்கிழமை தெரிவித்தார்.  கடலூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் து.தங்கராசு தலைமையில்  திங்கள்கிழமை நடந்தது.

               கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதுப்பிக்க ஏற்கனவே, சிறப்பு சாலைத் திட்டத்தில் தமிழக அரசு ரூ.10.1 கோடி அனுமதித்தது. இப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் மேலும் ரூ.10 கோடியை அரசு வழங்கி உள்ளது.  இதுதொடர்பாக சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் தலைவர் தங்கராசு கூறியது:  

              முன்னதாக 25.2 கி.மீ. நீளச் சாலைகள் அமைக்க நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. 25 பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.  தற்போது மேலும் ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளதால்  72 சாலைகள் அமைக்கப்படும். அதில் 71 சாலைகள் சிமெண்ட சாலைகளாக இருக்கும். ஒன்று மட்டும் தார்ச்சாலை. இச்சாலைப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். 

                   மார்ச் மாதத்துக்குள் 65 கி.மீ. நீளச் சாலைகள் முடிவடையும். ஏற்கனவே 45 கி.மீ. நீளச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டன.   மழை, வெள்ளத்தால் 14 கி.மீ. நீளச் சாலைகள் சேதம் அடைந்தன. அவற்றை புதுப்பிக்க அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கி இருக்கிறது என்றார் தங்கராசு.  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

சனி, அக்டோபர் 02, 2010

பண்ருட்டி நகரப் பகுதியில் 600 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்: சுகாதார அலுவலர்

பண்ருட்டி:

                 பண்ருட்டி நகரப் பகுதியில் சுற்றித்திரியும் 600 தெரு நாய்களுக்கு நடப்பாண்டில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இப்பணி இரு வாரத்தில் தொடங்கும் என சுகாதார அலுவலர் ராஜேந்திரன் கூறினார்.
 
                  பண்ருட்டி நகராட்சியின் நகரமன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நடந்த விவாதம்: 

கமலக்கண்ணன் (அதிமுக): 

               எனது வார்டில் சிமென்ட் சாலைகள் உடைந்துள்ளதால் அவ்வழியே செல்வோர் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர். செயல் படாத எரிவாயு தகன மேடைக்கு பல லட்சம் செலவு செய்யும் நகர நிர்வாகம் ஏன் இந்த சாலையை சீர் செய்ய முன்வரவில்லை? 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                 சாலை பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 

 சண்முகம் (அதிமுக): 

                 எனது வார்டு பணிக்காக தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரையில் டெண்டர் வைக்கவில்லை. சப்பாணி தெருவில் விளக்கு அமைக்கப்படவில்லை. 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                  33 வார்டுகளில் தெரு விளக்கு போட விளக்கு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மின் வாரியத்திடம் கட்டியுள்ளோம். 

சரஸ்வதி (அதிமுக): 

                எனது வார்டில் ரூ.40 லட்சத்தில் பணி நடைபெறும் என கூறினீர்கள். அந்த வேலை என்னவானது? 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                   பொது நிதியில் செய்து தருகிறேன். இம்முறை அதிமுக கவுன்சிலர்கள் வார்டுக்கு மட்டும் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கார்த்திக் (அதிமுக): 

                கடந்த 4 ஆண்டுகளாக தெரு நாய்களைப் பிடிக்கவில்லை, இதனால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன.  

கோதண்டபாணி (துணைத் தலைவர்), 

தட்சிணாமூர்த்தி (திமுக): 

                    நாய்களை எப்போது பிடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினர். 

ராஜேந்திரன் (சுகாதார அலுவலர்):

                          நடப்பாண்டில் 600 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்வதற்கான கட்டடம் கட்டும் பணி ரூ.2.90 லட்சம் செலவில் நடைபெறுகிறது. இன்னும் இரு வாரத்தில் பணி முடிந்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறினார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - ம.தி.மு.க. வெளிநடப்பு

சிதம்பரம்: 

             சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானத்தை கண்டித்து நகர மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

                  சிதம்பரம் நகர மன்ற கூட்டம் தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.

                 கூட்டத்தில் சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒட்டு மொத்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்த தீர்மானத்தை கண் டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க., கவுன்சிலர் கள் மணிவேல், சிவராம தீட்சிதர், செந்தில் குமார், ஜெயவேல், சரோஜா, குமார் மற்றும் ம.தி.மு.க., சீனுவாசன் ஆகிய 7 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

ரமேஷ் (பா.ம.க.,): 

                  சிதம்பரம் நகரில் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கொடுக்கப்பட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது சாத்தியமில்லாதது, லாட்ஜ், திருமண மண்டபங்களில் கூடுதல் தொகை வசூலிக்கலாம். இது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.,): 

                 நகரில் ஏற்கனவே வீடுகளுக்கு உள்ள குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை அதிகம் உயர்த்த வேண்டாம். புதிய இணைப்பு கேட்பவர்களிடம் உயர்த்தி வசூலிக்கலாம். மேலும் லாட்ஜ் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தலாம்.

அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): 

               சமீபத்தில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் சிதம்பரம் நகரில் குடிசைப் பகுதி மேம் பாட்டுத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 392 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட் டுள்ளதாக தவறான புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 147 வீடுகள் தான் கட்டி முடிக்கப்பட் டுள்ளதாக கமிஷனர் கூறுகிறார். ம.கம்யூ., கூட்டத்திலும், இந்த கூட்டத்திலும் தலைமை ஏற்ற நீங்கள் எந்த கூட்டத்தில் பேசியது சரி, இதுபோன்று பொய் யான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.,): 

                 சிதம்பரம் மேம்பாலம் அருகே இலவச கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை தற்காலிகமாக மூடவேண்டும். (தி.மு.க., கூட்டணி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அந்த கழிவறையை மூட டேபிள் தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்து உடனடியாக நிறைவேற்றப்பட்டது)

மணிகண்டன் (தி.மு.க.,): 

                 சிதம்பரம் தெற்கு வீதியில் காலை 11 மணிக்கு குப்பை அள் ளப் படுகிறது. எனவே நகரில் நான்கு வீதிகள், நான்கு சன்னதிகள், பஸ் நிலையம், வேணுகோபால் தெரு ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை, நகராட்சியில் தற்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 30 துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Read more »

சனி, ஆகஸ்ட் 07, 2010

குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை : சிதம்பரம் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

சிதம்பரம்: 

              சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., கூட் டணிக் கட்சியினர் சேர் மனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. 

               சிதம்பரம் நகர மன்ற கூட்டம் சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன் முன் னிலை வகித்தார். அதிகாரிகள் கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சேர்மன்: 

               சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் பற் றாக்குறையைப் போக்க 718. 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு நிதியாக 615.60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் 102.62 லட்சம் ரூபாயில், 50 லட் சம் ரூபாய் நகராட்சி நிதியிலும், மீதித் தொகையை வீட்டு உபயோக குடிநீர் இணைப்பில் டெபாசிட் தொகையை உயர்த்த உறுப் பினர்கள் அனுமதிக்க வேண்டும்.

ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க): 

             குடிநீர் பிரச்னை தொடர்பாக அரசாணை வெளியிட்டு 10 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளாத நிலையில் இத்திட்டம் நிறைவேற்ற நகராட்சி பங்களிப்பு தொகை 164.18 லட்சம் ரூபாயினை மக்கள் மீது திணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டில் தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டிருந் தால் நகராட்சி நிதியில் இருந்து செலுத்தியிருக்கலாம். சேர்மன் செயலை கண்டித்தும், நகராட்சி திட்ட தீர்மானங்களை நகராட்சி மண்டல இயக்குனர் தலைமையில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். 

            10 நிமிடத்திற்கு பின் மீண்டும் உள்ளே வந்து இனி வரும் கூட்டங்களை நகராட்சியின் மண்டல இயக்குனர் தலைமையில் நடத்த மினிட் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனர் .உடன் சேர்மன், கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துச் சென்றார். ஆனால் கவுன்சிலர்கள் சேர்மன் அறைக்குச் சென்று தரையில் அமர்ந்து ஒரு மணி நேரம் முற்றுகையிட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதனால் நகரமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

சனி, ஜூலை 31, 2010

சிதம்பரத்தில் பணிகள் நிறைவேற்றப்படவில்லை:தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

சிதம்பரம்:

              சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப் பணிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் நடந்தது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வார்டு உறுப்பினர் தியாகராஜனை சேர்மன், உறுப்பினர்கள் வரவேற்றனர்.

தி.மு.க., உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்:

            கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்படி எந்த பணியும் நடக்கவில்லை. மேலும் நகரில் குடிநீர் தட்டுப்பாடு, நாய்,குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தி.மு,க., கூட்டணி கட்சிகளான காங்., வி.சி., உறுப்பினர்களுடன் சுயேச்சை உறுப்பினர்கள் சேர்ந்து வெளி நடப்பு செய்கிறோம் என வெளி நடப்பு செய்தனர்.அரங்கில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் மட்டும் இருந்ததால் கூட்டத்தை சேர்மன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தார். ஆணையாளர் பொறுப்பு மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read more »

சனி, ஜூலை 24, 2010

குடிநீர் கட்டண உயர்வுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு : கடலூர் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

கடலூர் : 

            கடலூர் நகர மன்ற கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்பால் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

           கடலூர் நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

குமார் (அ.தி.மு.க.,): 

           குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தி மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும். பெரும் பாலான பகுதிகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சாக்கடை நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. அதனை நிவர்த்தி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த பின் கட்டணத்தை உயர்த்தலாம். அதுவரை இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதே கருத்தை அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியதால், குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைப்பதாக சேர்மன் அறிவித்தார்.

கந்தன் (அ.தி.மு.க.,): 

        குடியிருப்பு பகுதிகளில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தது போல் அதே வேகத்தில் ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் செய்ய வேண்டும்.

குமார் (அ.தி.மு.க.,): 

          முதுநகர் மாலுமியார்பேட்டையில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழுந்து வருகிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ராஜா (தி.மு.க.,): 

         திருப்பாதிரிப்புலியூர் எரிவாயு தகன மேடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ராதகிருஷ்ணன் (பா.ம.க.,): 

        கொசுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாய் துன்னிசா (தி.மு.க.,): 

           கால்வாய் பணியை செய்யும் கான்ட்ராக்டர்களை வீட்டு குடிநீர் இணைப்புகள் உடைந்து விட்டால் அதனை சரி செய்ய வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். அதனை கான்ட் ராக்டர்களே சரி செய்து கொடுக்க வேண்டும்

துணைத் தலைவர் தாமரைச்செல்வன்: 

            பாதாள சாக்கடை பணியைத் தொடர்ந்து நெல்லிக் குப்பம் சாலை போடப்பட்டது போல் பிற பகுதிகளிலும் சாலை போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பணிகள் விரைந்து முடியும். குடிசைப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் செய்பவர்கள் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதில்லை.

               இறுதியாக மன்ற விவாதத் திற்கு கொண்டு வந்த 29 தீர்மானங்களில் குடிநீர் வரி உயர்வைத் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Read more »

வியாழன், ஜூலை 01, 2010

பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பண்ருட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர் மாதாந்திர இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

முருகன் (அ.தி.மு.க., ): 

                    விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு முகாமில் உள்ள தமிழர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதித்துள்ள நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு தெரிவித்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளியே சென்ற நிலையில் தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி அனைத்து தீர்மானங்கள் நிறைவேறியதாக கூறி தேசியகீதம் ஒலிக்க கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தேசிய கீதம் பாடியதும் சேர்மன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர்.

ஒரு நிமிட கூட்டம்

                   பண்ருட்டி நகரமன்ற கூட்டம் காலை 11.30க்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 11.45க்கு சேர்மன் பச்சையப்பன், கவுன்சிலர்கள் நகர்மன்ற கூடத்திற்கு வந்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. பின் 11.55க்கு சேர்மன் உதவியாளர் ஜார்ஜ் வந்தார். 12 மணிக்கு கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் வந்தனர். கூட்டம் 12.10க்கு தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி 12.13க்கு முடிந்தது. 12.14க்கு தீர்மானம் படிக்கத் துவங்கியதும் அ.தி.மு.க., வினர் வெளிநடப்பு செய்ததும் 12.15க்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் முடிக்கப் பட்டது.

Read more »

செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை: நகரமன்றம் ஒப்புதல்

கடலூர் :

                   கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறை நில ஆர்ஜிதம் செய்ய நகர மன்றத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகர மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். கமிஷனர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

ராஜா (தி.மு.க.,): 

              சுரங்கப் பாதை அமைக்கும்போது பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் சாலைக்கு மூன்று வழிகள் கூறப் பட்டுள்ளது. இதில் பாடலி தியேட்டர் வழியாக சாலை அமைப்பது தான் சிறந்து. தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த தொகையை வசூலிக்க வேண்டும், பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

சர்தார் (காங்.,): 

                 கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டு, பாதாள சாக்கடை திட்டத் திற்கு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையை ஒரு மாதத்திற்குள் சரி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்தி வருகிறது. வார்டுகளில் குப்பை, கால் வாய்களில் அடைப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த பணியும் நடக்காமல் உள்ளது. எனவே மேற் பார்வையாளர்கள் அனைவரும் மாற்ற வேண்டும்.உடன் சேர்மன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மேற்பார்வையாளர்களை மாற்ற உத்தரவிட்டார்.

குமார் (அ.தி.மு.க.,): 

                 பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் சரியாக நடக்கவில்லை. அது போலத்தான் சுரங்கப்பாதை பணியும் நடக்கிறது. மழைக்காலம் வருவதற்குள் குண்டும் குழியுமாக உள்ள இடங்களை சீர் செய்யாவிட்டால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்.

முத்து (சுயே.,): 

                கடலூர் மாவட்டத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர் உள்ளார். இந்த நிலையில் ஒரு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டசபையில் எம். எல்.ஏ., அய்யப்பன் கோரிக் கையை ஏற்று புறவழிச்சாலைக்கு ஓப்புதல் அளித்துள்ளனர். இந்த சாலை அமையும் போது கடலூருக்கு மேலும் ஒரு புதிய பஸ் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தன் (அ.தி.மு.க.,): 

                நகராட்சியில் இரண்டு டைப்பிஸ்ட் உள்பட 11 இடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் மந்தமாக உள்ளது. பின்னர் கடலூரில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான அனுமதி, 1.42 கோடி ரூபாயில் பல்வேறு இடங்களில் சாலை அமைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

செவ்வாய், ஜூன் 01, 2010

குடிநீர் தட்டுப்பாட்டால் சிதம்பரம் மேற்குப் பகுதி மக்கள் பாதிப்பு: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

சிதம்பரம்:

              குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் சிதம்பரம் மேற்கு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

                சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ ஆணையர் ​(பொறுப்பு)​ மாரியப்பன் முன்னிலை வகித்தார்.​ 

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

 அப்பு சந்திரசேகரன் ​(திமுக):​ 

                   நகரின் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இருவேளையும் குடிநீர் வழங்கப்படுகிறது.​ ஆனால் வக்காரமாரி குடிநீர் திட்டம் மூலம் நகர மேற்கு பகுதியில் ஒருவேளைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.​ அதுவும் சுமார் 20 நிமிடங்கள்தான் வருகிறது.​ அந்தக் குடிநீர் பச்சை நிறத்தில் மாசு படிந்து சுகாதாரமற்ற வகையில் வழங்கப்படுகிறது.​ அதற்கு காரணம் மேலவீதி நீர்தேக்கத் தொட்டியில் சரியாக நீரை தேக்கி வைத்து சுத்தப்படுத்தி வழங்குவதில்லை.​ அதிகாரிகளின் அலட்சிப்போக்கே இதற்கு காரணம்.

நகர்மன்றத் தலைவர்:​ 

           இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜேம்ஸ் விஜயராகன் ​(திமுக):​ 

               நகரில் மக்கள்தொகை ​ அதிகரித்துள்ளது.​ மேலும் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் நகரின் வெளிப்புறம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

நகர்மன்றத் தலைவர்:​ 

                அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.ரா.வெங்கடேசன் ​(திமுக):​ அமைச்சர் கோவிந்தசாமி தெருவில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டி பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.​ இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆணையர்:​ 

               அத் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.​ உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாலம் அமைக்கப்படும்.

முகமது ஜியாவுதீன் ​(காங்கிரஸ்):​ 

                 நகரில் அனைத்து கைப்பம்புகளும் பழுதடைந்துள்ளதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர்.​ நகரில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது.​ எனவே நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.​ 4 வீதிகளிலும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.​ உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.​ மின்நகர் பூங்கா பராமரிப்பின்றி ரெüடிகளின் கூடாரமாகத் திகழ்கிறது.​ எனவே அப் பூங்காவை சீரமைக்க வேண்டும்.

ஆ.ரமேஷ் ​(பாமக):​ 

               புதிய பாதாள சாக்கடை திட்டம்,​​ ​ குடிநீர் திட்டம் செயல்படுத்தப்போவதாக கூறி நகரில் எந்த சாலைகளும் போடவில்லை.​ இன்னும் ஒரு ஆண்டுதான் பாக்கி இருக்கிறது.​ உடனே சாலைகள் அமைத்து தர வேண்டும்.​ பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான நிதியிலிருந்து பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை.​ போட்ட சாலைக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​ 2000-ம் ஆண்டு போடப்பட்ட திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 நிமிடத்தில் முடிந்த பண்ருட்டி நகர மன்ற கூட்டம்

 பண்ருட்டி :

            பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது.  சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.  துணை சேர் மன் கோதண்டபாணி,  பொறியாளர் சுமதி செல்வி,  சுகாதார அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்  கவுன்சிலர்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் வந்தனர்.  கூட்டம் துவங்கியவுடன் தி.மு.க., கவுன்சிலர் ரகூப் தனது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழைய பைப்களை மாற்றி புதியதாக அமைக்க வேண்டும் என்றார். தி.மு.க.கவுன்சிலர் தட்சணாமூர்த்தி 'துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. பணியாளர்கள் வருவதில்லை, சம்பளம் மட்டும் எப்படி வழங்குகிறீர்கள். மண்வெட்டி, சவுள் இல்லை என கூறுகின்றனர்' என்றார். அ.தி.மு.க.,கவுன்சிலர் பன்னீர் செல்வம் 'கடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைக்காக பேசிய எங்கள் மீது  சேர்மன் கொடுத்த பொய் வழக்கு காரணமாக நாங்கள் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந் துள்ளோம். கவுன்சிலர் ரமாதேவி கொடுத்த புகாரில் சேர்மன் உள் ளிட்ட ஆறு தி.மு.க., கவுன்சிலர் மீது கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு சேர்மன் ஜனநாயக முறையில் பதில் கூற வேண்டும். அதுவரை கூட்டம் நடத்த விடமாட்டோம்' என்றார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சேர்மன் பச்சையப்பன் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்து விட்டு நகரமன்ற கூடத்தை விட்டு வெளியேறினர். அவரை தொடர்ந்து  தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள்  வெளியேறினர்.  பின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்  சேர்மன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சியின் சீர் கேட்டை  கண்டித்து நகராட்சி வாயில் முன் கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 22, 2010

லாரன்ஸ் ரோட்டில் 'சப் வே' அமைப்பதில் சிக்கல்! நிலம் ஆர்ஜிதம் செய்ய ரூ.3 கோடி தேவையாம்

 கடலூர் : 

           மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலூர் ரயில்வே சுரங்கபாதை அமைப்பதில் திடீர் சிக் கல் ஏற்பட்டுள்ளது. நில ஆர்ஜித பணிக்கு மூன்று கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
 
            கடலூர் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருப்பாதிரிபுலியூரில் ரயில்வே சுரங்க பாதை அமைப்பது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் தாமரைச் செல்வன், கவுன்சிலர்கள்,  கமிஷனர் குமார் மற்றும் பொறியாளர் மனோகரசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
 
சேர்மன் தங்கராசு: 

              பாதாள சாக்கடை திட்டபணி 2010ல் முடிவடையும். நகராட்சியில் சிங்காரத்தோப்பு, தேவனாம் பட்டினம், அக்கரை கோரி உட்பட 12 வார்டுகள் கடலோர பகுதிகள் என்பதால் இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. திருப்பாதிரிபுலியூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க குறைந்த பட்சம் 20.5 மீட்டர் அகலம் தேவை படுகிறது. இதில் தற்போது 11 மீட்டர் சாலையே உள்ளது. மீதமுள்ள இடத்திற்கு இப் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய மூன்று கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ரயில்வே சுரங்கபாதை அமைப்பது சம்மந்தமாக கலெக்டர் தலைமையில் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன் னிலையில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
 
கவுன்சிலர் கோவலன்: 

          சுரங்கப்பாதையில் எந்தெந்த வாகனங்கள் செல்லலாம். வாகனங்களை எங்கு நிறுத்துவது.
 
சேர்மன்: 

          இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லலாம். சுரங் கபாதையின் உயரம் 9 அடி என்பதால் பஸ், லாரி உள் ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது.
 
சரளா: 

           செல்லங்குப் பம், சிவானந்தபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப் பட்டு வாரப்படாமலும், சாக்கடை சுத்தம் செய்யப் படாமல் உள்ளது.
 
ராதாகிருஷ்ணன்: 

               கொசு மருந்து அடிப்பதற்கு மேலும் 11 மிஷின்கள் வாங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதற்கு பதிலாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அடிக்கப்படும் கொசு மருந்தை, 15 நாட்களுக்கு ஒரு முறை அடித் தாலே கொசுக்கள் ஒழிந்துவிடும். இதற்கு நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து வாங்கிக் கொடுத் தால் போதும். 17வது வார்டில் பாதாளசாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
 
கமலநாதன்: 

            பாஷியம் ரெட்டித் தெருவில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து வாட்டர் போர்டு அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரியான பதிலை கூறாமல் போனை துண்டித்து விடுகின்றனர். கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.
 
துணை சேர்மன் தாமரைச் செல்வன்: 

               கடலூர் பகுதியில் அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்றே வைக்க வேண்டியுள்ளது. இதற்கு பதில் நகராட்சியில் அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். நகராட்சி வருவாய் அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது ஒரு வீட்டிற்கும், இன்னொரு வீட்டிற்கும் ஏற்றத்தாழ்வு உள்ளது.  இதனால் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது கவுன்சிலர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior