உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

குடிநீர் தட்டுப்பாட்டால் சிதம்பரம் மேற்குப் பகுதி மக்கள் பாதிப்பு: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

சிதம்பரம்:

              குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் சிதம்பரம் மேற்கு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

                சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ ஆணையர் ​(பொறுப்பு)​ மாரியப்பன் முன்னிலை வகித்தார்.​ 

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

 அப்பு சந்திரசேகரன் ​(திமுக):​ 

                   நகரின் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இருவேளையும் குடிநீர் வழங்கப்படுகிறது.​ ஆனால் வக்காரமாரி குடிநீர் திட்டம் மூலம் நகர மேற்கு பகுதியில் ஒருவேளைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.​ அதுவும் சுமார் 20 நிமிடங்கள்தான் வருகிறது.​ அந்தக் குடிநீர் பச்சை நிறத்தில் மாசு படிந்து சுகாதாரமற்ற வகையில் வழங்கப்படுகிறது.​ அதற்கு காரணம் மேலவீதி நீர்தேக்கத் தொட்டியில் சரியாக நீரை தேக்கி வைத்து சுத்தப்படுத்தி வழங்குவதில்லை.​ அதிகாரிகளின் அலட்சிப்போக்கே இதற்கு காரணம்.

நகர்மன்றத் தலைவர்:​ 

           இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜேம்ஸ் விஜயராகன் ​(திமுக):​ 

               நகரில் மக்கள்தொகை ​ அதிகரித்துள்ளது.​ மேலும் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் நகரின் வெளிப்புறம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

நகர்மன்றத் தலைவர்:​ 

                அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.ரா.வெங்கடேசன் ​(திமுக):​ அமைச்சர் கோவிந்தசாமி தெருவில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டி பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.​ இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆணையர்:​ 

               அத் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.​ உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாலம் அமைக்கப்படும்.

முகமது ஜியாவுதீன் ​(காங்கிரஸ்):​ 

                 நகரில் அனைத்து கைப்பம்புகளும் பழுதடைந்துள்ளதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர்.​ நகரில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது.​ எனவே நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.​ 4 வீதிகளிலும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.​ உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.​ மின்நகர் பூங்கா பராமரிப்பின்றி ரெüடிகளின் கூடாரமாகத் திகழ்கிறது.​ எனவே அப் பூங்காவை சீரமைக்க வேண்டும்.

ஆ.ரமேஷ் ​(பாமக):​ 

               புதிய பாதாள சாக்கடை திட்டம்,​​ ​ குடிநீர் திட்டம் செயல்படுத்தப்போவதாக கூறி நகரில் எந்த சாலைகளும் போடவில்லை.​ இன்னும் ஒரு ஆண்டுதான் பாக்கி இருக்கிறது.​ உடனே சாலைகள் அமைத்து தர வேண்டும்.​ பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான நிதியிலிருந்து பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை.​ போட்ட சாலைக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​ 2000-ம் ஆண்டு போடப்பட்ட திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior