உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை: நகரமன்றம் ஒப்புதல்

கடலூர் :

                   கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறை நில ஆர்ஜிதம் செய்ய நகர மன்றத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகர மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். கமிஷனர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

ராஜா (தி.மு.க.,): 

              சுரங்கப் பாதை அமைக்கும்போது பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் சாலைக்கு மூன்று வழிகள் கூறப் பட்டுள்ளது. இதில் பாடலி தியேட்டர் வழியாக சாலை அமைப்பது தான் சிறந்து. தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த தொகையை வசூலிக்க வேண்டும், பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

சர்தார் (காங்.,): 

                 கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டு, பாதாள சாக்கடை திட்டத் திற்கு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையை ஒரு மாதத்திற்குள் சரி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்தி வருகிறது. வார்டுகளில் குப்பை, கால் வாய்களில் அடைப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த பணியும் நடக்காமல் உள்ளது. எனவே மேற் பார்வையாளர்கள் அனைவரும் மாற்ற வேண்டும்.உடன் சேர்மன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மேற்பார்வையாளர்களை மாற்ற உத்தரவிட்டார்.

குமார் (அ.தி.மு.க.,): 

                 பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் சரியாக நடக்கவில்லை. அது போலத்தான் சுரங்கப்பாதை பணியும் நடக்கிறது. மழைக்காலம் வருவதற்குள் குண்டும் குழியுமாக உள்ள இடங்களை சீர் செய்யாவிட்டால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்.

முத்து (சுயே.,): 

                கடலூர் மாவட்டத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர் உள்ளார். இந்த நிலையில் ஒரு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டசபையில் எம். எல்.ஏ., அய்யப்பன் கோரிக் கையை ஏற்று புறவழிச்சாலைக்கு ஓப்புதல் அளித்துள்ளனர். இந்த சாலை அமையும் போது கடலூருக்கு மேலும் ஒரு புதிய பஸ் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தன் (அ.தி.மு.க.,): 

                நகராட்சியில் இரண்டு டைப்பிஸ்ட் உள்பட 11 இடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் மந்தமாக உள்ளது. பின்னர் கடலூரில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான அனுமதி, 1.42 கோடி ரூபாயில் பல்வேறு இடங்களில் சாலை அமைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior