சிதம்பரம், டிச. 16:
மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. வியாழக்கிழமை முதல் (டிசம்பர் 17) சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், ஜனவரி.15-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே புதன்கிழமை 60 கி.மீ. வேகத்தில் 2 பெட்டிகள் கொண்ட சோதனை ஓட்ட ரயில் இயக்கப்பட்டது. திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் இந்த வேக சோதனை ஓட்ட ஆய்வை மேற்கொண்டனர்.
மீட்டர்கேஜ் பாதை அகற்றி அகல ரயில்பாதை அமைக்க மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே ஜனவரி 2006-ம் ஆண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டது. தற்போது வியாழக்கிழமை முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர். மேலும், உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுóம். எக்ஸ்பிரஸ் ரயில்களை ஜன.15 முதல் இயக்கலாம் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவர்களுக்கு தனி முன்பதிவு கவுண்டர் அமைக்க கோரிக்கை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பயிலுகின்றனர். இவையல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயிலுகின்றனர். இவர்கள் ரயில்நிலையத்தில் டிக்கட் முன்பதிவு செய்ய நீண்ட கியூ வரிசையில் நிற்பதால் உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்ய முடியவில்லை. என மாணவர்களுக்கு என தனி முன்பதிவு கவுண்டர் திறக்க வேண்டும் என பொதுநலத் தொண்டர் வே.கலியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக