விருத்தாசலம், டிச.16:
விருத்தாசலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் சார்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 9, 10-ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள் 120 பேருக்கு,விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி உட்பட மூன்று மையங்களில் அடிப்படை கணினி பயிற்சி திங்கள்கிழமை முதல் 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.
விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் செய்முறை பயிற்சியை அப்பள்ளி முதல்வர் அருள்மேரி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் 48 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பெரிய நெசளூர் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் விருத்தாசலம் கல்வி மாவட்ட, திட்ட ஒருங்கிணைப்பாளராகவும்,இப்பயிற்சியின் நோக்கம் பற்றி மாநில அளவில் பயிற்சி பெற்று வந்த கணினி ஆசிரியர்கள் அமிர்தராஜ்,தேவேந்திரன் ஆகியோர் கருத்தாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இப்பயிற்சியானது உண்டு உறைவிடப் பயிற்சியாக 18-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறும் என விருத்தாசலம் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக