சிதம்பரம், டிச. 16:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறும் 77-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இதற்காக அவர் அன்று காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் வருகிறார். இதையொட்டி, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள ஹெலிபேடு இடத்தை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், துணைவேந்தர் பங்களாவில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். நடராஜன், துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன், பதிவாளர் எம். ரத்தினசபாபதி, பல்கலைக்கழக மக்கள்- தொடர்பு அலுவலர் எஸ். செல்வம், டி.எஸ்.பி. மா. மூவேந்தன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆளுநர் வருகையையொட்டி, பாதுகாப்பு குறித்தும், சாலை வசதி, குடிநீர், மின்சார வசதி ஆகியவற்றை தயார்நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்திரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக