கடலூர், டிச. 16 :
கடலூரில் புதன்கிழமை ஆய்வுக்கு வந்த ரயில் முன் மறியல் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50 பேரை போலீஸôர் கைது செய்தனர். கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.÷கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வேணடும் என்ற கோரிக்கைக்காக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் திட்டம் எந்த அளவிóல் உள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லையேல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால், இத் தடத்தில் ரயில்கள் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது.
எனவே, விடுதலைச் சிறுத்தைகளின் ரயில் மறியல் போராட்டம் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழாமல் இருந்தது.
இந் நிலையில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் அலுவலர்கள் ரயில் தண்டவாளங்கள் ஆய்வுப் பணிக்காகத் தனி ரயிலில் புதன்கிழமை மயிலாடுதுறையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக தகவலறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் அருகே ஆய்வு ரயில் முன் மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு. திருமாறன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் அறிவுக்கரசு, சொக்கலிங்கம், கிட்டு, ஜெயராமன், சுரேஷ், புலிக்கொடியான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக ஆய்வு ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைக் கடந்து செல்வதில் 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸôôர் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக