உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

கீழகல்பூண்டியில் பிற்பட்டோர் நலவிடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் மாணவர்கள் வலியுறுத்தல்

டிச 01 , திட்டக்குடி: 
    
 கட்டி முடிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநத்தம் அடுத்த கீழகல்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் சுமார் ரூ.25 லட்சத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி கட்ட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு விடுதி கட்டி முடிக்கப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கடலூரில் நடந்த அரசு விழாவில் அமைச்சர்கள் அன்பழகன், பெரியசாமி ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர். ஆனால் கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்படாமல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் துறையிடம் பொதுப்பணித் துறையினர் கட்டிடத்தை ஒப்படைத்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, மின் இணைப்பு வழங்கப்படாமலும், குடிநீர் வசதி செய்யப்படாமல் இருப்பதையும் கண்டனர். கட்டிடத்தில் உள்ள அனைத்து ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், மின் விளக்குகள் உடைக்கப்பட்டும், சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பு இல் லாத நிலையை கண்ட அதிகாரிகள், பணி முழு வதும் முடித்தால் மட்டும் கட்டிடத்தை பெற்று கொள்வோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினர்.
 கடந்த ஓராண்டாக கட்டிடத்தில் எந்த பணியும் நடைபெறாததால், கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. விடுதி கட்டிடத்தில் அடிப்படை வசதிகளை செய்து
முடித்து விரைந்து கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior