கடலூர், டிச. 9:
அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்க்க சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் ஏ.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று மாவட்ட தொழிலாளர் அலுவலர் புனிதவதி அறிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உ டல்உழைப்பு கட்டுமானம், ஆட்டோ, தையல், சலவை, பனைமரம், கைவினை, கைத்தறி, காலணி, ஓவியர், மண்பாண்டத் தொழில் பொற்கொல்லர், வீட்டுப் பணியாளர், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் இந்த சிறப்பு முகாமில் நவாரிய உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
காட்டுமன்னார்கோயில் தாலுகாவைச் சேர்ந்த மேற்கண்ட தொழிலாளர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, குடும் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் அசலுடன் வந்து உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன் அடையலாம்.
15 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் ஒவ்வொரு தாலுகா தலைமை இடத்திலும், பிரதிமாதம் 2-வது வெள்ளிக் கிழமைகளில் நடைபெற உள்ளது. ஆங்காங்கே வசிக்கும் தொழிலாளர்கள், இந்த முகாம்களில் கலந்துகொண்டு நலவாரியங்களில் உறுப்பினர்களாக ஆகுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக