உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

போலீ​சை கண்டித்து பாமக முற்றுகை

கடலூர்,​​ டிச.​ 9:​ ​ 

                     சொத்​துத் தக​ரா​றில் போலீ​ஸôர் ஒரு​த​லைப் பட்​ச​மாக நடந்து கொள்​வ​தா​கக் குற்​றம் சாட்டி,​​ நடு​வீ​ரப்​பட்டு காவல் நிலை​யத்தை பா.ம.க.வினர் புதன்​கி​ழமை ​ 2 மணி நேரம் முற்​று​கை​யிட்​ட​னர்.​
 
           நெல்​லிக்​குப்​பம் அருகே மூலக்​குப்​பம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர்​கள் விவ​சா​யி​கள் நாரா​ய​ண​சாமி மற்​றும் கலி​ய​மூர்த்தி.​ இரு குடும்​பத்​தி​ன​ரும் கடந்த 6-ம் தேதி நிலத்​த​க​ரா​றில் மோதிக்​கொண்​ட​னர்.​ இதில் கலி​ய​மூர்த்தி தரப்​பில் இரு பெண்​கள் உள்​ளிட்ட 7 பேர் காயம் அடைந்​த​னர்.​ அனை​வ​ரும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்ப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கி​றார்​கள்.​ ​ நாரா​ய​ண​சாமி தரப்​பில் 4 பேர் லேசான காயம் அடைந்​த​னர்.​ மோதல் தொடர்​பாக நடு​வீ​ரப்​பட்டு போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​
 
                       இந்​நி​லை​யில் பலத்​தக்​கா​யம் அடைந்து மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்​று​வ​ரும் கலி​ய​மூர்த்தி தரப்​பி​னர் மீது கொலை முயற்சி உள்​ளிட்ட பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து 4 பேரை போலீ​ஸôர் கைது செய்​துள்​ள​னர்.​ நார​ய​ண​சாமி தரப்​பி​னர் மீது சாதா​ரண பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து,​​ யாரை​யும் கைது செய்ய வில்​லை​யாம்.​
 
               எ​னவே கலி​ய​மூர்த்தி தரப்​பில் அவ​ரது ஆத​ர​வா​ளர்​க​ளும் பா.ம.க.​ வின​ரும் சேர்ந்து சுமார் 200 பேர் நடு​வீ​ரப்​பட்டு காவல் நிலை​யத்தை புதன்​கி​ழமை முற்​று​கை​யிட்​ட​னர்.​ ஒன்​றிய பா.ம.க.​ ​ செய​லா​ளர் தட்​சி​ணா​மூர்த்தி தலை​மை​யில் நடந்த இந்த முற்​றுகை சுமார் 2 மணி நேரம் நீடித்​தது.​ கலி​ய​மூர்த்தி தரப்​பி​ன​ரைத் தாக்​கிய நபர்​கள் மீது உரிய பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து கைது செய்ய வேண​டும்,​​ பிரச்​னைக்​கு​ரிய நிலம் தொடர்​பாக 145 விசா​ர​ணைக்கு உத்​த​ர​விட வேண்​டும் என்​றும் அவர்​கள் கோரி​னர்.​ ​ தக​வல் அறிந்​த​தும் ​ பண்​ருட்டி போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் விரைந்து வந்து முற்​று​கை​யிட்​ட​வர்​க​ளி​டம் பேச்சு நடத்​தி​னார்.​ உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று உறுதி அளிக்​கப்​பட்​ட​தைத் தொடர்ந்து முற்​று​கைப் போராட்​டம் கைவி​டப்​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior