நெய்வேலி, டிச. :9
சமூக பொறுப்புணர்வோடு தொண்டாற்றிவரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பணிகளை திருச்சியைச் சேர்ந்த உளவியல் நிபணரான டாக்டர் கோபாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இங் குள்ள என்.எல்.சி. பயிற்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனவளம் குன்றியோருக்கான தேசிய நாள் விழாவில் கெüரவ விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்சி சொளமான்யஸ் மனநல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மேலும் பேசியது:÷தா யின் வயிற்றில் குழந்தைகள் வளரும் போது தாய்க்குத் தேவையான உணவு ஊட்டச்சத்து, உடல்நோய்கள் போன்ற காரணங்களினால் தான் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. போபால் விஷவாயு தாக்கிய சமயத்தில், அப்பகுதியில் போதிய மனநல மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு தரப்பினர் மனநலம் பாதிக்கப்பட்டனர். மனநலம் குன்றியோருக்கான நலன்காக்கும் விதிமுறைகள் 1995-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கான உரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு நமது பரிதாபத்தைக் காட்டுவதைக் காட்டிலும், அவர்களுக்கு பொறுமையுடனும், இரக்கக் குணத்துடனும், விடாமுயற்சியுடனும் உதவவேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணன்.
முன் னதாக, விழாவில் பங்கேற்ற என்.எல்.சி. நிறுவன தலைவர் ஏ.ஆர். அன்சாரி பேசும்போது, மனநலம் குன்றியோருக்கான சினேகா வாய்ப்புச் சேவைகள் பள்ளிக்கு என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றார். மனநலம் குன்றியவர்கள் நிறுவனத்தின் தொழில் பிரிவுகளில் பணியமர்த்தப்படா விட்டாலும், அவர்கள் நிர்வாகப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார். நிறுவன இயக்குநர்கள் வி.சேதுராமன் மற்றும் சுரேந்திரமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, ஸ்நேகா வாய்ப்புச் சேவைகள் அமைப்பின் தலைவர் கிஷ்வர் சுல்தான வரவேற்றார்.அமைப்பின் உறுப்பினர்கள் டாக்டர் உஷா மற்றும் ஜனார்த்தனன் மனநலம் குன்றியோருக்கான உரிமைகள் குறித்த உறுதிமொழியைக் கூற அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
அமைப்பின் செயலர் சண்முகசுந்தரம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக