உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

மரபணு மாற்​றப் பயிர்​களை தடை செய்ய வேண்​டு​கோள்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 9:​ 

                    கேர​ளத்​தைப் போல் பிட்டி பருத்தி உள்​ளிட்ட மரபணு  மாற்​றப் பயிர்​களை தமிழ்​நாட்​டில் தடை செய்ய வேண்​டும் என தமி​ழக உழ​வர் முன்​னணி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.​

     இ​து​கு​றித்து அந்த முன்​ன​ணி​யின் ஆலோ​ச​கர் கி.வெங்​கட்​ரா​மன் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ 

                       மர​ப​ணுக்​க​ளின் தன்​மை​யை​யும்,​​ வரி​சை​யை​யும் மாற்​றி​ய​மைத்து உரு​வாக்​கப்​ப​டும் மர​பீனி மாற்​றப் பயிர்​களை உரிய ஆய்​வின்றி இந்​திய அரசு அனு​ம​தித்து வரு​கி​றது.​ இது ஆபத்​தா​னது.​ மர​பீனி மாற்​றப் பயிர்​கள் சாகு​ப​டிச் செலவு பன்​ம​டங்கு அதி​க​ரித்து,​​ உழ​வர்​களை கட​னா​ளி​யாக்கி,​​ கடும் பாதிப்பை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ மராட்​டிய மாநி​லம் விதர்ப்​பா​வி​லும்,​​ ஆந்​தி​ரத்​தி​லும் மர​பீனி மாற்​றப்​ப​யி​ரான பிட்டி பருத்​தியை சாகு​படி செய்த உழ​வர்​கள் கழுத்து முட்​டும் கட​னில் சிக்கி,​​ பல ஆயி​ரம் பேர் தற்​கொலை செய்து கொண்​ட​னர்,​​ ​
            
               த​மி​ழ​கத்​தில் தர்​ம​புரி,​​ சேலம் மாவட்​டங்​க​ளில் பிட்டி பருத்தி சாகு​படி செய்த உழ​வர்​கள் பேரி​ழப்​புக்கு உள்​ளா​கி​யுள்​ள​னர்.​ ஏனெ​னில் மர​பீனி மாற்​றப்​ப​யிர்​க​ளின் விதையி​லி​ருந்து அதற்​கென்று தயா​ரிக்​கப்​ப​டும் பூச்​சிக்​கொல்லி,​​ ஊக்​கி​கள் வரை அனைத்​தும் அதி​கம் செலவு கொண்​டவை.​ அந்த அள​விற்கு உரிய விளைச்​ச​லும்,​​ விலை​யும் உழ​வர்​க​ளுக்கு கிடைப்​ப​தில்லை.​ மரபணு  பயிர்​கள் ஓவ்​வாமை,​​ மலட்​டுத்​தன்மை,​​ கருச்​சி​தைவு,​​ ரத்த உறை​வைக் குறைப்​பது,​​ சிறு​நீ​ர​கக் கோளாறு போன்ற பாதிப்​பு​களை உண்​டாக்​கு​கி​றது என ஆய்​வில் கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது÷மேற்கு தொடர்ச்சி மலை​யின் பல்​லு​யிர் பன்​மையை மர​பீன பயிர்​கள் ஒழித்​து​வி​டும் என்ற கார​ண​தக்தை எடுத்​துக் காட்டி எம்.எஸ்.சுவா​மி​நா​தன் தலை​மை​யி​லான வேளாண்​மை​யில் உயி​ரித் தொழில்​நுட்ப பயன்​பாடு குறித்த செயல்​பாட்​டுக்​குழு இப்​ப​யிர்​களை அங்கு அனு​ம​திக்​கக்​கூ​டாது என எச்​ச​ரித்​துள்​ளது.​ மேற்​கண்ட அனைத்து உண்​மை​க​ளை​யும் ஏற்​றுக்​கொண்ட கேரள அரசு தங்​கள் மாநி​லத்​தில் மரபணு  மாற்​றப் பயிர்​க​ளின் ஆய்​வுப் பண்​ணை​க​ளை​யும்,​​ விற்​ப​னை​யை​யும் தடை செய்​துள்​ளது.​ இதனை கேரள முதல்​வர் 30-11-09 அன்று பிர​த​ம​ருக்கு எழு​தி​யுள்ள கடி​தத்​தில் உறு​திப்​ப​டுத்​தி​யுள்​ளார்.​

       எ​னவே இதே​போல் அழிவை ஏற்​ப​டுத்​தும் மரபணு மாற்​றப் பயிர்​கள் அனைத்​தை​யும் தமிழ்​நாட்​டி​லும் தடை செய்ய வேண்​டும் என தமி​ழக அரசை கேட்​டுக்​கொள்​கி​றோம் என கி.வெங்​கட்​ரா​மன் தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior