நெய்வேலி, டிச. 9:
கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸôர் அடகு நகை வியாபாரி வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறி, அதைக் கண்டித்து அடகு நகை வியபாரிகள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் (படம்) நடத்தினர்.
விருத்தாசலத்தில் அடகு நகை வியாபாரம் செய்து வருபவர் சாம்பாஜி. இவர் திருட்டு நகை ஈட்டின் பேரில் பணம் வழங்குவதாக ஒரு குற்றவாளி அளித்தத் தகவலின் பேரில், அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு டெல்டா பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் 7 போலீஸôர் சென்றனராம். வீட்டின் மாடியில் ஏறிக் குதித்து கதவை உடைக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், சாம்பாஜியும், அவரது மனைவி மீனாவும் வெளியே வந்தபோது, எவ்வித காரணமும் கூறாமல் சாம்பாஜியை போலீஸôர் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டம் நடத்திய அடகு நகை வியாபாரிகள் நகை அடகு வணிகர்கள் சங்கத் தலைவர் சோகன்லால் தலைமையில் அணி திரண்டனர். போலீஸôரால் கைது செய்யப்பட்ட சாம்பாஜி எங்கு, எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை எழுத்துமூலமாக தெரிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட தலைமை நீதிபதி, விழுபுப்புரம் சரக டிஐஜி உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக