உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

பண்​ருட்​டி​யில் வயிற்றுப்போக்கு:​ ஒரு​வர் சாவு

பண்ருட்டி,​​ டிச.​ 9: 
 
                  பண்​ருட்டி விழ​மங்​க​லம் பகு​தி​யில் வயிற்றுப்போக்கு கார​ண​மாக ரங்​க​நா​தன் ​(65) செவ்​வாய்க்​கி​ழமை இறந்​தார்.​
 
                50-க்கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​பண் ​ருட்டி விழ​மங்​க​லம் காலனி பகு​தி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஒரு சில​ருக்கு வயிற்றுப்போக்கு ஏற்​பட்​டது.​ இது மேலும் பர​வி​ய​தைத் தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்​பட்​டோர் பண்​ருட்டி அரசு மருத்​து​வ​மனை மற்​றும் தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்​ற​னர்.​÷இந்​ நி​லை​யில் வயிற்றுப்போக்கால் பாதிக்​கப்​பட்டு அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்ட ரங்​க​நா​தன் ​(65) செவ்​வாய்க்​கி​ழமை இறந்​தார்.​ இத​னால் பண்​ருட்டி பகு​தி​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​
 
 
                        இந்​நோ​ யால் பதிக்​கப்​பட்ட 19 பேர் பண்​ருட்டி அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ மோச​மான நிலை​யில் இருந்த லட்​சுமி ​(60),​ குப்பு ​(55) ஆகிய இரு​வ​ரும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னைக்கு மேல் சிகிச்​சைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​
 
                 நோய் பாதித்த பகு​தி​யில் மருத்​து​வக் குழு​வி​னர் முகா​மிட்டு நோய் தடுப்பு நட​வ​டிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​
 
                   ந ​கர ஆணை​யர் உமா​ம​கேஸ்​வரி,​​ நகர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன்,​​ சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன் ஆகி​யோர் நேரில் சென்று ஆய்வு செய்​துள்​ள​னர்.​
 
                       க​ழி​வு​நீர் கலந்த குடி​நீ​ரால் இந்​நோய் ஏற்​பட்​ட​தாக தெரிய வந்​துள்​ளது.​ இதனை தொடர்ந்து குடி​நீரை ஆய்​வுக்​காக அனுப்​பி​யுள்​ள​னர்.​ மேலும் அப்​ப​கு​தி​யில் கிடந்த குப்​பை​கள் அகற்​றி​யும்,​​ தேங்கி நின்ற கழிவு நீரை வெளி​யேற்​றி​யும்,​​ அடை​பட்ட கால்​வாய்​களை தூர்​வா​ரும் பணி​யி​லும் நக​ராட்சி ஊழி​யர்​கள் ஈடு​ப​டுத்​தப்​பட்​ட​னர்.​ நோய் பாதித்த விழ​மங்​க​லம் பகு​தியை மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் புதன்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.​ அங்கு அமைக்​கப்​பட்​டி​ருந்த மருத்​துவ முகா​முக்கு சென்று தக​வல்​களை கேட்​ட​றிந்​தார்.​ முகாம் அருகே தேங்கி இருந்த கழிவு நீரை அப்​பு​றப்​ப​டுத்​த​வும்,​​ சுகா​தார நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு ஆணை​யர் உமா​ம​கேஸ்​வ​ரி​யி​டம் கூறி​னார்.​
  
பின்​னர் நிரு​பர்​க​ளி​டம் அவர் கூறி​யது:​ 
 
இப்​ப​கு​தி​யில் உள்ள ஒவ்​வொரு குழா​யி​லும் தண்​ணீரை எடுத்து சோதனை செய்ய உத்​த​ர​விட்​டுள்​ளேன்.​ ஆய்வு அறிக்கை வந்​த​வு​டன் கார​ணம் தெரிய வரும்.​ பண்​ருட்டி மற்​றும் ஒன்​றிய பகு​தி​யில் நோய் பர​வா​மல் இருக்க மாவட்ட நிர்​வா​கத்​தி​டம் பேசி மேலும் சில மருத்​து​வக் குழுக்​களை அனுப்ப உள்​ளேன் என்​றார்.​
 
             பண் ​ருட்டி வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​​ சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன்.​ கவுன்​சி​லர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior