கடலூர், டிச. 9:
கடலூர் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் ஆதரவற்றுக் கிடந்த பெண் குழந்தையை மகளிர் காவல் நிலையப் போலீஸôர் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில், திங்கள்கிழமை இரவு குழந்தை அழும் சப்தம் கேட்டது.
அலுவலக ஊழியர் வந்து பார்த்தபோது, பிறந்து 3 நாள்களே ஆன பெண் குழந்தை குளிரில் நடுங்கியபடிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா விரைந்து சென்று, அந்தக் குழந்தையைக் கைப்பற்றினார். சைல்டு லைன் அமைப்பின் மூலமாக குழந்தை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மா வட்ட சமூக நலத்துறை மூலம் இக் குழந்தை அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தத்து கொடுக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பிறந்து 3 நாள்களே ஆன இக் குழந்தையைப் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில் போட்டுச் சென்றது யார் என்று கடலூர் புதுநகர் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் சரிபார்க்கப்பட்டன. அனைத்து குழந்தைகளும் சரியாக இருப்பதாக தெரிவிக்ககப்பட்டது.
அண்மைக் காலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை முள்புதரிலும், பொது இடங்களிலும் அநாதையாக விட்டுச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக