கடலூர், டிச. 9:
கடலூர் மத்திய சிறைக் கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிறைச்சாலை துப்புரவுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (23). கொலை வழக்கில் அவர் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
திங்கள்கிழமை காலையில், அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சிறை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து விட்டார் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பாலு இறந்தார்.
இ துதொடர்பாக சிறைச்சாலை துப்புரவுத் தொழிலாளி மனோகரனை (35) பணி இடைநீக்கம் செய்து சிறைத்துறை இயக்குநர் ஷியாம் சுந்தர் உத்தரவிட்டார்.
இரு போலீஸôர் இடைநீக்கம்
பெண் கைதி லட்சுமி (33) தப்பி ஓடியது தொடர்பாக, போலீஸ் காவலர்கள் இந்திரா, விநோத்குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ராஜாவின் மனைவி லட்சுமி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த லட்சுமி, கடந்த 7-ம் தேதி தப்பி ஓடிவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக