கடலூர், டிச. 9:
விபத்தில் காயம் அடைந்த இருவருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு அளிக்காததால், அரசு பஸ் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
வி ழுப்புரம் மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (27), வீரன் (43). கடந்த 23-6-2002 அன்று இருவரும் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை டிரைவர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த செல்வம் (32) ஓட்டினார்.
செண் டூர் அருகே அந்தக் காரும் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு எக்ஸ்பிரஸ் பஸ்ஸýம் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் முருகேசன் இறந்தார். வீரன், செல்வம் ஆகியோர் காயம் அடைந்தனர்.
க டலூர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரித் தொடரப்பட்ட வழக்கில் முருகேசன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் காயம் அடைந்த செல்வத்துக்கு 1.13 லட்சம் மற்றும் வீரனுக்கு ரூ. 93 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்க வில்லையாம்.
நஷ்ட ஈட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது செல்வத்துக்கு ரூ. 1.97 லட்சமும், வீரனுக்கு ரூ. 1.61 லட்சமும் வழங்க வேண்டியுள்ளது.
எ னவே நஷ்டஈட்டுத் தொகை கோரி கடலூர் சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்காததால் அரசு பஸ்ûஸ ஜப்தி செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த சென்னை- வேளாங்கண்ணி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு நீதிமனற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
இதேபோல் விபத்து நஷ்டஈடு வழங்காததற்காக மற்றொரு சென்னை- வேளாங்கண்ணி அரசு எக்ஸ்பிரஸ் பஸ் ஏற்கெனவே ஜப்தி செய்யப்பட்டு கடலூர் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக