நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு பகுதியில் தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டை சுற்றி சி.என். பாளையம், குமளங்குளம், சிலம்பிநாதன்பேட்டை, பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகளவு உள்ளதால் அடிக்கடி தீnவிபத்து ஏற்படுகிறது. அவ்வாறு தீ விபத்து ஏற்பட்டால் 15 கி.மீ., தூரம் உள்ள நெல் லிக்குப்பம் தீ அணைப்பு நிலையத்திலிருந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.அவர்கள் அப்பகுதியில் ஏதாவது தீ விபத்து நடந்திருந்தால் அங்கு போய் அதை அணைத்துவிட்டு வந்த பிறகு தான் இங்கு வருகின்றனர்.இதனாலும் அவர்கள் அங்கிருந்து வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. நாமும் வந்து தீயை அணைத்தோம் என அங் குள்ள சாம்பலில் தண்ணீர் அடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களிடம் தகராறு செய்கின்றனர். சரியான நேரத் திற்கு வராததால் அதிகளவு பொருட் சேதம் ஏற்படுகிறது.இதனை தவிர்த்திட நடுவீரப்பட்டு பகுதியில் தீயணைப்பு நிலையம் துவக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக