சிதம்பரம் :
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் குடும்பத் தோடு பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க கூட்டம் சிதம்பரத்தில் மாநில தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. ஆலோசகர்கள் கோவிந்தராஜ், ஏகாம்பரம், சின்னப்பா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் குடும்பத்தோடு பங்கேற்பது. தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதரை நினைவு கூறும் வகையில் செம்மொழி மாநாட்டு நுழைவு வாயில் ஒன்றுக்கு தியாகராஜ பாகவதர் பெயர் சூட்ட தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் ராமச் சந்திரன், ராஜரத்தனம், சுப்ரமணியன், மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக