உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

சுகாதார சீர்கெடு, ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதிகடலூர் பஸ் ஸ்டேண்டில் தொடரும் அவலநிலை

கடலூர் :

           கடலூர் பஸ் ஸ்டேண்டில் சுகாதார சீர்கெடு மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் தவித்து வருகின்றனர்.கடலூர் பஸ் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் விரிவுப்படுத்தி அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

               நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் தற்போது பஸ் நிலையத்தின் பெரும் பகுதி அப்பகுதி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக டவுன் பஸ்கள் நிற் கும் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நடைபாதையை முற்றிலுமாக ஆக் கிரமித்துக் கொண்டுள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் நிறுத்த கட்டைகளில் நிற்பதால் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.பஸ் நிலையத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் அடைத்துக் கொண்டுள்ளன.இதனால் அங்குள்ள ஓட்டல் மற்றும் டீ கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
                   பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பஸ் நிலையத்தை சுற்றி வந்து பயணிகளை அச்சறுத்தி வருகிறது. பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் இலவச கழிவறை பராமரிப்பின்றி தூர்நாற்றம் வீசுவதால், அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடிவில்லை. இதனால் இந்த கழிவறை அமைந்துள்ள பகுதியே தற்போது திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் தலைநகரான கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுகாதார சீர்கேடுகளை நீக்கிட நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior