கடலூரில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்றுமதிக்கு தயார் நிலையிலிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடுகள் சேதமடைந்தன.
கடலூர் துறைமுகம், மீனவளத் துறை அலுவலகம் மற்றும் சோனங்குப்பம் தோணித்துறை ஆகிய இடங்களில் மீனவர்கள் கருவாடு தயார் செய்து, கோழி தீவனத்திற்காக ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். உற்பத்தி செய்யப்படும் கருவாடுகள், சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வரை ஏற்றுமதி செய்து வந்தனர். சீசன் இல்லாத காலங்களில் வாரத்திற்கு 40 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கருவாடுக்காக மீன்கள் உலர வைப்பது குறைந்துள்ளது.
இருப்பினும் கடந்த ஒரு வாரமாக கடலூர் துறைமுகம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 3 களங்களிலும் மீன்களை உலர வைத்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடுகளை ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைத்தி ருந்தனர். இந்நிலை யில் கடந்த 21ம் தேதி இரவு முதல் பெய்த தொடர் மழையால் கருவாடு கள் ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு வீணாகிப் போனது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்,
"மழையால் கருவாடுகள் பாழாகிப் போனது. இவற்றை பள்ளம் தோண்டி அழிப்பதை தவிர வேறு வழியில்லை' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக